காஞ்சீபுரம், காஞ்சீபுரம் மாவட்டத்தில் மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். ரத்தக்காயங்களுடன் ஆண் பிணம் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் மனை பிரிவு அருகே நேற்று காலை வாலிபர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் சோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் சேத்துப்பட்டு கிராமம், வடவண்டை தெருவை சேர்ந்த ராஜேஷ் (வயது 30) என்பது தெரியவந்தது. போலீசில் சரண் இந்த நிலையில் நேற்று சேத்துப்பட்டு கிராமம் வடவண்டை தெருவை சேர்ந்த தங்கம்(46) மற்றும் ஆனந்தஜோதி(32) ஆகிய 2 பேர் சோமங்கலம் போலீசில் சரண் அடைந்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையின்போது அவர்கள் கூறியதாவது: நேற்று முன்தினம் இரவு நாங்கள் ராஜேசுடன் சேர்ந்து மது குடித்தோம். அப்போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. மதுபோதையில் நாங்கள் அவரை கல்லால் தாக்கினோம். இதில் அவர் இறந்து விட்டார். நாங்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர். 2 பேர் கைது போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். போலீசார் ராஜேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கு முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/argument-over-drinking-alcohol-youth-killed-by-stone-2-arrested




