சென்னை, தொடர் தோல்வியால் மிருணாள் தாகூர் தடுமாறி வரும்நிலையில், அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படம் அதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. தொடர் பின்னடைவு இந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் மிருணாள் தாகூர், சீதாராமம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். அதன் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர், தற்போது பாக்ஸ் ஆபீஸில் தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறார். வெற்றி படம் இல்லை இந்த ஆண்டு வெளியான அவரது இந்தி படங்களான "டூ தீவானே சேஹர் மேன்"மற்றும் "ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா" ஆகியவை ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறின. அதேபோல், மிருணாள் நடித்த தெலுங்கு திரைப்படமான "டாகோய்ட்" படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் ஏமாற்றமளித்தது. இதனால், கடந்த சில மாதங்களாக அவருக்கு பெரிய வெற்றி படம் எதுவும் அமையவில்லை. "ராக்கா" இந்நிலையில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் "ராக்கா" திரைப்படம் மிருணாள் தாகூரின் அடுத்த முக்கியமான படமாக கருதப்படுகிறது. இருப்பினும், அந்த படத்தில் அவர் நடிப்பது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/mrunal-thakur-faces-slow-phase-as-film-offers-and-headlines-dry-up




