சென்னை, த.வெ.க தகவல் தொழில்நுட்ப அணி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- விவசாயிகள் நலன்களுக்காகவும் கர்நாடக வாழ் தமிழ் சொந்தங்களுக்காகவும் யோசித்துச் செயல்படுவதுதான் மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர், நம் வெற்றித் தலைவர், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் மனசாட்சி உள்ள மக்களாட்சி. காவிரி விவகாரம் திமுக போல சுயநலம் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்யத் துடிப்பவர் இல்லை, எங்கள் வெற்றித்தலைவர். தொடர்ந்து பல ஆண்டுகளாக மத்திய அரசிடம் பேரம் பேசி, பெற வேண்டிய இலாகாக்களை பெற்ற போதெல்லாம் காவிரி விவகாரத்திற்காக ஒரு மந்திரி பதவியையாவது, ஒருநாளாவது உதறி இருக்குமா இந்தத் திமுக? அத்தனை ஆண்டுகளில் ஒருமுறையாவது காவிரிப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண முயன்றிருக்குமா இந்தத் திமுக? அப்போதெல்லாம் பதவியில் ஒட்டிக்கொண்டு சுகம் கண்ட சுயநல இயக்கம்தான் இந்தத் திமுக. காரிய பூனைதான் திமுக ஆட்சியில் இருக்கும்போது சத்தம் போடுவதுபோல சவுண்ட் கொடுத்துவிட்டு, மியூட் மோடுக்குச் சென்று, மியாவ் என்று கூட சத்தம் எழுப்பாத காரிய பூனைதான் திமுக. ஆனால், ஆட்சி பறிபோன பிறகு பாருங்கள் மண், மொழி, மானம் என்று உரிமை முழக்கத்தை எழுப்பி எம்பி எம்பிக் குதிக்கும். எப்போதும் மக்களை தூண்டிவிட்டு குளிர்காயும் திமுக, இப்போது எரிச்சல் மற்றும் விரக்தி மோடில் அலறிக்கொண்டு இருக்கிறது. கடந்த மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட கட்சியாகத் தவிக்கும் திமுக, காவிரி விவகாரத்தில் கபட நாடகமாடுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள். எனவே, காவிரி பிரச்சனையில் ஸ்டாலின், திமுக ஆட்சி போய் விட்டதே, தவெக ஆட்சி வந்து விட்டதே என்று வன்மமாக பேசாமல் மக்கள் நலன் சார்ந்து உண்மையாக பேச வேண்டும். அப்படி அவரால் பேச முடியுமா முடியாதா? என்றால் அவர் உள்மனம் முடியாது என்றுதான் உண்மையான வன்மம் பேசும். இது அவர் மட்டுமன்று, உலகமே அறிந்த உண்மை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-is-a-business-cat-tvks-response




