டோக்கியோ, தென்மேற்கு ஜப்பானின் கியூஷு தீவில் உள்ள குமாமோட்டோ பகுதியில் (செவ்வாய்க்கிழமை) நேற்று 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. இரவு முழுவதும் மீட்புப் பணி நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இரவு முழுவதும் தீவிரமாக நடைபெற்றன. பலர் காயமடைந்துள்ளதுடன், சிலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலையிலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கட்டிடங்கள் இடிந்து சேதம் காஷிமா நகரில் உள்ள 'ஏயான் மால்' வணிக வளாகத்தின் இரண்டாவது தளம் இடிந்து விழுந்ததில் பலர் கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டதாக குமாமோட்டோ தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 'நிப்பான் பேப்பர் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தின் யாட்சுஷிரோ ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2.60 லட்சம் பேர் வெளியேற்றம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குமாமோட்டோ மற்றும் அண்டை மாகாணமான நாகசாகியில் வசிக்கும் சுமார் 2.60 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக வெளியேறுமாறு தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை முகமை அறிவுறுத்தியுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குமாமோட்டோ பகுதி, ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து தென்மேற்கே சுமார் 900 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பாதிப்பு பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/powerful-earthquake-in-japan-71-on-the-richter-scale-13-dead




