புது டெல்லி, புது டெல்லியில் இன்று நடைபெற்ற ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: சர்வதேச அரங்கம் கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் பயணம் என்பது பற்றாக்குறை இருந்து சுயசார்பு நிலைக்கும் சுயசார்பில் இருந்து தன்னம்பிக்கைக்கும், அங்கிருந்து வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கியும் நகர்ந்துள்ளது. முற்காலத்தில் சர்வதேச மேடைகளில் இந்தியா பேசும்போது பெரிய அளவில் முக்கியத்துவம் இருக்காது. ஆனால் இன்று, சர்வதேச அரங்கில் இந்தியா பேசும் போது, உலக நாடுகள் அனைத்தும் அதை உன்னிப்பாக கவனிக்கின்றன. மேக் இன் இந்தியா' திட்டம் 2014-ல் தொடங்கப்பட்ட மேக் இன் இந்தியா' திட்டம் கொண்டு தொடங்கப்பட்டது அப்போது இந்த திட்டம் தோல்வியடையும் என சிலர் முத்திரை கூறினர் அவர்களுக்கு மத்தியில், இன்று அது வெற்றி பெற்று வருகிறது. இதற்கு முன்பு உலகம் நமது குரலுக்கு சிறிதும் செவிசாய்க்காத நிலையில், இப்போது உலகளாவிய பிரச்சினைகள் குறித்த இந்தியாவின் கண்ணோட்டத்தை உலக நாடுகள் கவனமாக கேட்கின்றன. சாதனை படைத்துள்ளது 2013-14-ம் நிதியாண்டில் ரூ. 686 கோடியாக இருந்த பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி, இப்போது ரூ. 38,000 கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது. இந்த பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி கிட்டத்தட்ட 57 மடங்கு அதிகம் எனவும் மேக்-இன்-இந்தியா போன்ற திட்டங்கள் மீதான உலகளாவிய நம்பிக்கையை அதிகரித்துள்ளது. 2025-26-ம் நிதியாண்டில் ஆண்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தி ரூ.1.78 லட்சம் கோடி என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. உண்மையான சக்தி ஊடகங்களின் உண்மையான சக்தி என்பது செய்திகளை பரப்புவதில் மட்டுமல்லாமல், சமூகத்தை சரியான திசையில் வழிநடத்துவதிலும், உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதிலும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதிலும் உள்ளது. மேலும் தவறான செய்தி சமூகத்தை கடுமையாக பாதிக்கும் என்று கூறிய அவர், பத்திரிகை துறையில் முதலில் செய்தி வெளியிடுவது முக்கியமாக இருந்தாலும், சரியான செய்திகளை வெளியிடுவது அதைவிட மிக முக்கியமானது என்று பாதுகாப்பு துறை மந்திரி ராஜநாத் சிங் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/union-minister-rajnath-singh-is-indias-record-holder-in-defense-logistics-exports



