Full artikkel
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் இரண்டு அணிகள் உருவாகின. இதனைத்தொடர்ந்து அதிமுக-விலிருந்து சில எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெக-வில் இணைந்தனர். தவிர அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் எனப் பலர் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருகின்றனர். எம்.ஆர் விஜயபாஸ்கர் சமீபத்தில் விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் தற்போது எம்.ஆர் விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவர் வரும் வியாழக்கிழமை தவெகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் அளித்திருக்கிறார். சபாநாயகர் ஜேசிடி பிராபகரும் அதனை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்திருக்கிறார். சபாநாயகரிடம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "சட்டமன்றப் பேரவை விதி 21-இன் படி கரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மாண்புமிகு திரு. M.R. விஜயபாஸ்கர் தனது பதவி விலகல் கடிதத்தை தம் கைப்பட எழுதி என்னிடம் அளித்துள்ளார். எம்.ஆர் விஜயபாஸ்கர் அவர் அளித்த பதவி விலகல் கடிதம் சட்டமன்றப் பேரவை விதி 22-இன் படி முறையாக உள்ளதால் அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Full artikkel — se lenken under



