வேலூர், வேலூர் பி.டி.ஓ அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றியதாக புகார் எழுந்துள்ளது. தலைகீழாக தேசியக்கொடி நாடு முழுவதும் 80-வது சுதந்திர தின விழா இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் வேலூர் அண்ணா சாலையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமால், சத்தியமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. அதிகாரிகள் அலட்சியம் தேசியக்கொடியை ஏற்றுவதற்கு முன்பு முறையாக சரிபார்க்காமல், அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் மாவட்ட நிர்வாகம் உரிய கண்காணிப்பையும் நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/velur-bdo-office-complaint-over-hoisting-national-flag-upside-down




