Full artikkel
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் பிரபல திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக விளங்கிய திரு. K பாக்யராஜ் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தவர் மறைந்த திரு. பாக்யராஜ் அவர்கள். “அண்ணா நீ என் தெய்வம்” என்ற புரட்சித் தலைவர் அவர்களின் முடிவுறாத படத்தின் காட்சிகளை வைத்து, அதற்கேற்ப ஒரு புதிய திரைக்கதை அமைத்து, “அவசர போலீஸ் 100” என்ற படமாக எடுத்து அதில் வெற்றியும் கண்டார். எடப்பாடி பழனிசாமி மாண்புமிகு புரட்சித் தலைவர் அவர்களும் திரு. பாக்யராஜ் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தார். இந்திய திரையுலகின் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்குரிய அவர்தம் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பதாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் டகுபதி: "பாக்யராஜ் சார் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். மொழிகளைக் கடந்து, கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டவை அவரது படைப்புகள். அவரது அசாத்தியமான கதைசொல்லல் திறனில் உருவான 'சுந்தரகாண்டா', 'அப்பாயிகாரு' போன்ற திரைப்படங்களில் நானும் ஒரு பகுதியாக இருந்ததை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். இந்திய சினிமா இன்று தன் சிறந்த இயக்குநர்களில் ஒருவரை இழந்துவிட்டது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்". தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் தமிழ்நாடு இடைக்கால ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்: "தமிழ்த்திரையுலகின் மூத்த இயக்குநரும், எழுத்தாளருமான திரு. கே. பாக்யராஜ் அவர்களின் மறைவு சினிமா உலகிற்குப் பேரிழப்பாகும். அவரது தனித்துவமான கதைசொல்லும் திறன், படைப்பாற்றல் மற்றும் தமிழ்த்திரையுலகிற்கான அவரது அளப்பரிய பங்களிப்பு ஆகியவை அவரை மக்களின் இதயங்களில் ஒரு தனி இடத்தில் சிம்மாசனமிட்டு அமரச் செய்துள்ளன. அவர் விட்டுச்சென்ற கலைப்பணிகள், தலைமுறை கடந்தும் திரைப்பட இயக்குநர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் என்றும் ஊக்கமளிப்பதாக விளங்கும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்." ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஊர்வசி இரங்கல் இயக்குநர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பால் காலமானார் . 'முந்தனை முடிச்சு' திரைப்படம் மூலம் இவர் தான் நடிகை ஊர்வசியைத் திரையுலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். பாக்யராஜ் மறைவு குறித்து ஊர்வசி, "எனக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. முதலில் என்ன செய்வதென்று தெரியவில்லை. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும். இதைத் தாங்குமளவு குடும்பத்தினருக்கு கடவுள் அமைதியை தர வேண்டும்" என்று இரங்கல் தெரிவித்துள்ளார். பாக்யராஜ் - ஊர்வசி தமிழ் திரையுலக வரலாற்றில் இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜிற்கு தனி இடம் உண்டு. இவரது திரைக்கதைக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். திரைக்கதை மன்னனான பாக்யராஜ் இன்று காலை சென்னையில் மாரடைப்பால் காலமானார் . முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Full artikkel — se lenken under


