செயின்ட் லூயிஸ், கிராண்ட் செஸ் தொடரின் இறுதி சுற்று அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் 4 வீரர்கள் நேரடியாக அரைஇறுதியில் மோதினர். ஒவ்வொரு அரைஇறுதியும் 2 கிளாசிக்கல், 2 ரேபிட், 4 பிளிட்ஸ் ஆட்டங்கள் கொண்டதாகும். இதன் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் பலப்பரீட்சை நடத்தினர். கிளாசிக்கல் ஆட்டம் முடிவில் 6 புள்ளி முன்னிலையுடன் களம் கண்ட பிரக்ஞானந்தா இரண்டு ரேபிட் ஆட்டங்களிலும் வின்சென்ட் கீமரை வீழ்த்தியதுடன் இறுதிப்போட்டியை யும் உறுதி செய்தார். இதைத்தொடர்ந்து நடந்த 4 பிளிட்ஸ் ஆட்டங்களில் முதல் ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றியை பெற்றார். அடுத்த 3 ஆட்டங்களிலும் வின்சென்ட் கீமர் ஆறுதல் வெற்றி பெற்றார். முடிவில் பிரக்ஞானந்தா 19-9 என்ற புள்ளி கணக்கில் வின்சென்ட் கீமரை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/othersports/grand-chess-praggnanandhaa-advances-to-the-final




