புதுடெல்லி, இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் அஜிங்க்யா ரஹானே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.அஜிங்க்யா ரகானேவின் ஓய்வு அறிவிப்பு, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் ரஹானே விளையாடுவார் எனத்தெரிகிறது. ஐபிஎல் போட்டிகளில் தற்போது கொல்கத்தா அணிக்காக ரகானே விளையாடி வருகிறார். ரஹானேவின் ஓய்வு அறிவிப்பைத் தொடர்ந்து, விராட் கோலி கூறியதாவது, சிறப்பான கிரிக்கெட் பயணத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள் நண்பா. இந்திய கிரிக்கெட்டுக்காக நீங்கள் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. உன்னுடைய கிரிக்கெட் பயணத்தை நினைத்து நீங்கள் பெருமைப்படலாம். ஸ்லிப் பகுதியில் நான் பார்த்த மிகச் சிறந்த கேட்ச் பிடிப்பவரும், டெஸ்ட் கிரிக்கெட்டில் எனக்கு மிகவும் பிடித்த பேட்டிங் இணையும் நீங்கள் தான். உங்களுடைய எதிர்காலம் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துகள். கடவுள் எப்போதும் ஆசீர்வதிக்கட்டும்" என்று விராட் கோலி உருக்கமான வாழ்த்தை பகிர்ந்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/your-contribution-has-been-immense-virat-kohli-congratulates-rahane




