கோவை, காரின் கூரையில் படுத்தவாறு 40 கி.மீ துரத்திச் சென்று குட்கா கடத்தல் கும்பலை பிடித்த காவலரின் துணிச்சல் பாராட்டத்தக்கது என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- வாழ்த்து கோவை மாவட்டம், விளாங்குறிச்சி பகுதியில் காரில் குட்கா கடத்தி வந்த கும்பலை, அந்தக் காரின் மேற்கூரை மீது பாய்ந்து படுத்தபடியே 40 கி.மீ தொலைவுக்கு துரத்திச் சென்று பிடித்த கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகனின் துணிச்சலும், கடமை உணர்வும் பாராட்டத்தக்கவை. உயிரை துச்சமென மதித்து செயல்பட்ட காவலர் வேல்முருகன் குற்றங்களையும், கடத்தல்களையும் தடுப்பதில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மாறியிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள். தலைமைக் காவலர் வேல்முருகனின் கடமை உணர்வை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு தமிழக அரசு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/40-km-chase-with-contempt-for-life-anbumani-praises-the-chief-constable




