நெல்லை, நெல்லை, தென்காசி மாவட்டங்களையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் 2 மாவட்டங்களிலும் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 309 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில், நேற்று நீர்வரத்து 900 கன அடியாக அதிகரித்தது. கடந்த ஆண்டைவிட குறைவு அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 63 அடியை தாண்டியது. கடந்த ஆண்டு இதேநாளில் பாபநாசம் அணை நீர்மட்டம் 129 அடியாக இருந்த நிலையில் தற்போது அதில் பாதி அளவுக்கு மட்டுமே நீர் இருப்பு உள் ளது. இதேபோல் கடந்த ஆண்டு 137 அடி இருந்த சேர்வலாறு அணை நீர்மட் டம் நேற்று 77 அடியாக இருந்தது. 118 அடி உயரம் கொண்ட மணிமுத் தாறு அணை நீர்மட்டம் 69 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 70 கன அடியாகவும், வெளியேற்றம் 175 கன அடி யாகவும் உள்ளது. குண்டாறு அணை நிரம்பியது தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. 36 அடி உயரம் கொண்ட குண்டாறு அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக நேற்று நிரம்பி வழிந்தது. அணையில் இருந்து உபரிநீர் அப்படியே வெளியேறி வருகிறது. 85 அடி உயரம் கொண்ட கடனாநதி அணை நீர்மட்டம் 56 அடியாக உள்ளது. அணைக்கு வருகிற 60 கன அடி தண்ணீர் அப்படியே பாசனத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/widespread-rainfall-in-the-western-ghats-region-gundaru-dam-fills-up




