சென்னை, சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய்யின் ஆணவப் பேச்சைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் வரும் 12ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. விஜய் பேச்சுக்கு கண்டனம் இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில், “திராவிட முன்னேற்றக் கழகத்தையும், ஐந்து முறை இந்த நாட்டை ஆண்ட முன்னாள் முதல்-அமைச்சர் தலைவர் கலைஞரையும், இந்தியாவின் புகழை தோகா மாநாட்டில் நிலைநாட்டிய பொருளாதார மேதை முரசொலி மாறனையும், திருமணம் ஆன ஐந்தே மாதத்தில், 23 வயதில் மிசா அவசரநிலைச் சட்டத்தில் கைதாக்கப்பட்டு சிறைச்சாலை சித்திரவதைகளை அனுபவித்து, ஓராண்டு காலம் சிறையில் இருந்த தியாகத்தை செய்த தலைவர் மு.க.ஸ்டாலினின் தியாகத்தை கொச்சைப்படுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய் பேசிய பேச்சு கடுமையான கண்டனத்துக்குரியது. மீம்ஸ், ரீல்ஸ் அரசியல் உலகில் இத்தகைய அருவெறுப்பான உரையை சட்டமன்றம் கண்டிருக்காது. அவரது உரை மூலமாக சட்டமன்றத்தின் மாண்பு, மரபு, வரலாறு இவை அனைத்தும் காற்றில் பறக்கிறது. படங்களாக அந்த அவையில் நிற்கிறவர்கள் தலைகவிழ்ந்து கண்ணீர் வடித்திருப்பார்கள். சில அமைச்சர்கள் சட்டமன்றத்தில் தான் பேசுவது தவறு என்று தெரிந்தே பேசி, 'மீம்ஸ்', 'ரீல்ஸ்'-ஐ வெளியிடுகிறார்கள். நேரலை மூலமாக மக்களை சென்றடைந்த பிறகு அதை ஒப்புக்கு அவைக்குறிப்பில் இருந்து நீக்கிக் கொள்கிறார்கள். இப்படியாக தந்திர மேடையாக சட்டசபையை த.வெ.க. அரசு பயன்படுத்துகிறது. ஆட்சியின் தோல்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தப்பித்துக் கொள்ள, கொச்சையான பேச்சுகளைப் பேசும் தரமற்ற மனிதராக முதல்-அமைச்சர் விஜய் மாறியிருக்கிறார். இவரது இப்பேச்சைக் கண்டிக்கும் வகையில், தி.முக. சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் வருகிற 12.09.2026 சனிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்” என்று கூறப்பட்டிருந்தது. திமுக வேட்பாளர்கள் இதனிடையே தாராபுரம், மதுரந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகம் தொகுதியில் திமுக சட்டத்துறை இணை செயலாளராக உள்ள பரந்தாமன் மற்றும் தாராபுரம் தொகுதியில் வழக்கறிஞர் சுகன்யாவும் போட்டியிட்டுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். இருந்தப்பவே இந்நிலையில் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்குத்தான் கூடுதல் செல்வாக்கு இருக்குமா. என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எம்.ஜி.ஆர். இருந்தப்பவே. எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருக்கும்போதே அண்ணா நகரிலும், மயிலாடுதுறையிலும் ஜெயிச்சிருக்கோம். ஆளுங்கட்சிதான் இடைத்தேர்தலில் ஜெய்க்கும் என்பது இலக்கணம் கிடையாது” என்று துரைமுருகன் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/it-is-not-a-rule-that-the-ruling-party-will-win-the-by-election-duraimurugan




