சேலம், சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணை தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாகும். இந்த அணை மூலமாக 12 மாவட்டங்களில் சுமார் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் டெல்டா பாசனம் மற்றும் மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. நேற்றைய தினம் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து சற்று குறைந்த நிலையில், இன்று நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை நீர்வரத்து 3,867 கன அடியாக இருந்தது. இந்நிலையில் இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 6,250 கன அடியாக உயர்ந்துள்ளது. அதே சமயம், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 12,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்தை விட, அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 83.67 அடியாக உள்ளது. அணையில் 45.72 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/water-inflow-to-mettur-dam-rises-to-6250-cubic-feet-per-second




