வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திருப்பதி தேவஸ்தான அதிகாரி லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமலை திருப்பதி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், ஏழுமலையான் கோயில் வளாகத்திற்குள் சாதாரண ஊழியராகச் சேர்ந்து தற்போது இணை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வருபவர் லோகநாதம். ஆன்மிக மக்களை அதிர்ச்சி அடையச் செய்த திருப்பதி தேவஸ்தான கலப்பட நெய் விவகாரத்தில் விசாரணை நடத்திய சி.பி.ஐ, மத்திய, மாநில அரசுகளுக்குச் சமர்ப்பித்த அறிக்கையில், ''கலப்பட நெய் வழக்கில் ஒப்பந்ததாரர்கள் மட்டுமின்றி சில தேவஸ்தான அதிகாரிகளுக்கும் பங்கு இருக்கிறது'' என்று தெரிவித்திருந்தது. லோகநாதம் இதனைத் தொடர்ந்து அவ்வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் விதமாக திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியாக இருந்த அனில்குமார் சிங்கால் ஏற்கனவே அப்பதவியிலிருந்து பணிமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், கோயிலின் இணை நிர்வாக அதிகாரியான லோகநாதத்தின் வீடு உட்பட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். நடத்தப்பட்ட சோதனையில், ரூ 5 கோடிக்கும் அதிகமான அசையா சொத்துக்கள், 2 கிலோ தங்க ஆபரணங்கள், 6.5 கிலோ வெள்ளிப் பொருட்கள் ரூ.12 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் லோகநாதம் குறித்து வெளியாகி வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. திருப்பதி தேவஸ்தானத்தில் சாதாரண ஊழியராகப் பணிக்குச் சேர்ந்து, கடந்த ஆட்சியில் விரைந்து துணை நிர்வாக அதிகாரியாக உயர் பதவிக்குச் சென்றுள்ளார். அது மட்டுமின்றி அவருடைய ஊதியத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் இவ்வளவு சொத்துக்கள் எப்படி வந்தது என்பதை தொடர்ந்து விசாரித்து வந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், தற்போது சோதனை நடத்தி லோகநாதத்தைக் கைது செய்துள்ளனர். இன்னும் சில அதிகாரிகள் கைதாவார்கள் என்று சொல்லப்படுகிறது. திருப்பதி லட்டு நெய் கலப்பட ஊழல்: திண்டுக்கல் உள்ளிட்ட 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/crime/tirupati-devasthanam-official-arrested-by-anti-corruption-bureau




