கொல்கத்தா, மேற்குவங்காள மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் புகழ்பெற்ற தரபதி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அப்பகுதிகளில் உள்ள ஓட்டல்களின் தங்குவந்து வழக்கம். இந்நிலையில், தரபதி கோவில் அருகே செயல்பட்டு வரும் ஓட்டலில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து - 6 பேர் பலி இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஓட்டலில் தங்கி இருந்த பக்தர்களில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு, மீட்புக்குழுவினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஓட்டலில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/west-bengal-hotel-fire-accident-6-killed




