சென்னை, பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறவுள்ள 2026 மகளிர் ஆக்கி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ள இந்திய மகளிர் அணியின் கம்பீர பயணத்தை தற்போது பார்ப்போம். நூலிழையில் தவறியது 2025 மகளிர் ஆசியக் கோப்பை தொடரில் உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்ட இந்திய அணி, அதன் பின் நடைபெற்ற தகுதி சுற்று போட்டிகள் மூலம் உலகக் கோப்பை வாய்ப்பை உறுதி செய்தது. சவால்களை கடந்து சாதனை 1. ஆசியக் கோப்பை 2025 - சவாலும் திருப்பமும் 2025 ஆசியக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை சென்ற இந்திய அணி, போட்டியை நடத்திய சீனாவிற்கு எதிராக தோல்வியடைந்து நேரடியாக உலகக் கோப்பைக்கு தகுதிபெறும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டது. இந்த தோல்வி ஒரு பின்னடைவாக இருந்தாலும், அதை ஒரு திருப்புமுனையாக எடுத்துக்கொண்ட இந்திய அணி, அடுத்த வாய்ப்பை நோக்கி தீவிர பயிற்சியில் ஈடுபட்டது. 2. ஐதராபாத் தகுதி சுற்று (மார்ச் 2026): ஐதராபாத்தில் நடைபெற்ற தகுதி சுற்றில் இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. அரையிறுதியில் இத்தாலியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக்கோப்பை வாய்ப்பை உறுதி செய்தது. இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றாலும், இத்தொடரின் சிறப்பான ஆட்டம் உலகக் கோப்பைக்கான இடத்தை உறுதி செய்தது. 3.நேஷன்ஸ் கோப்பை சாம்பியன் அதைத்தொடர்ந்து நியூசிலாந்தில் நடைபெற்ற நேஷன்ஸ் கோப்பை தொடரில், தோல்வியே அடையாமல் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. லீக் சுற்று: அமெரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் 0-2 என பின்தங்கியிருந்த இந்தியா, அற்புதமாக கம்பேக் கொடுத்து 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் உருகுவே அணிகளை வீழ்த்தி பிரிவில் முதலிடம் பிடித்தது. அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி: அரையிறுதியில் சிலியை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. தொடர்ந்து நடைபெற்ற இறுதிப்போட்டியில், போட்டியை நடத்திய நியூசிலாந்தை 2-0 என வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இது உலகக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணிக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. உலகக் கோப்பை பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து இணைந்து நடத்தும் இந்த வரலாற்று சிறப்புமிக்க உலகக்கோப்பைத் தொடர், ஆகஸ்ட் மாதம் 15 முதல் 30 வரை நடைபெறவுள்ளது. ' டி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, லீக் சுற்றில் சீனா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது. லீக் சுற்றின் அனைத்து போட்டிகளும் நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீனில் உள்ள வேகனர் ஆக்கி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணியின் லீக் சுற்றுப் போட்டிகள்: ஆகஸ்ட் 16: சீனாவுக்கு எதிராக ஆகஸ்ட் 18: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆகஸ்ட் 20: இங்கிலாந்துக்கு எதிராக முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/special-news/indian-womens-hockey-teams-road-to-fih-world-cup-2026




