ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அருகில் உள்ள காயிதே மில்லத் தெருவில் வசித்து வருகிறார் 80 வயதான முத்தம்மாள். கணவர் முத்துசாமி உயிரிழந்த நிலையில், முத்தம்மாள் தனியாகவே வாழ்ந்து வருகிறார். வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தி வந்த எரிவாயு நேற்று மதியம் தீரந்திருக்கிறது. மற்றொரு சிலிண்டரை பொருத்த உதவிக்கு ஆட்களை தேடியிருக்கிறார். மதிய வேளையில் அந்த தெருவில் நடந்து சென்ற நபர் ஒருவரை உதவிக்கு அழைத்திருக்கிறார். வீட்டிற்குள் சென்ற அந்த நபரும் சிலிண்டரை மாற்றிக் கொடுத்திருக்கிறார். உதவிக்கு கைமாறாக அந்த நபருக்கு டீ வைத்து கொடுத்திருக்கிறார். அதற்கிடையில் நோட்டம் விட்ட அந்த நபர் முத்தம்மாள் கண்ணில் மிளகாயைத் தூவி கழுத்தில் இருந்த தங்க நகை யை பறித்துச் சென்றுள்ளான். முத்தம்மாள் முத்தம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர், " அறிமுகம் இல்லாத நபர் ஒருவரை எதார்த்தமாக வீட்டிற்குள் அழைத்து சிலிண்டரை மாற்றச் சொல்லியிருக்கிறார். சமையலறையில் இருந்து மிளகாய் பொடியை எடுத்து தண்ணீரில் கலக்கிய அந்த நபர் பாட்டியின் கண்ணில் ஊற்றிவிட்டு கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தங்க செயினை திருடிச் சென்றுள்ளான். தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/crime/puliyambatty-gold-chain-theft-case-update




