புதுடெல்லி, புதிய குற்றவியல் சட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் சிறப்பு விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணை மந்திரி பண்டி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது;- “பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் மத்திய அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. புதிதாக அமல்படுத்தப்பட்ட 'பாரதிய நியாய சன்ஹிதா 2023' சட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான குற்றங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அவை அனைத்தும் ஒரே அத்தியாயத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த சட்டத்தில், 18 வயதிற்குட்பட்ட சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், திருமண ஆசை காட்டி, வேலைவாய்ப்பு அல்லது பதவி உயர்வு தருவதாகக் கூறி அல்லது அடையாளத்தை மறைத்து ஏமாற்றி பாலியல் உறவு கொள்வது புதிய குற்றமாக சேர்க்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்களை ஆடியோ-வீடியோ வடிவில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதோடு, மருத்துவ பரிசோதனை அறிக்கையை 7 நாட்களுக்குள் விசாரணை அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவச முதலுதவி மற்றும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதும் இச்சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/priority-given-to-preventing-crimes-against-women-and-children-special-provisions-included-in-the-new-criminal-laws




