ஈரோடு, ஈரோடு அருகே கரும்பு லாரியை வழிமறித்த ஒற்றை யானைக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்த ஓட்டுநர். வனவிலங்குகள் ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடர்ந்த வனப்பகுதி என்பதால், இந்த சாலையில் அடிக்கடி காட்டு யானைகள், சிறுத்தைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடுவது வழக்கம். யானைகள் குறிப்பாக, சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கரும்பு ஏற்றிக்கொண்டு வரும் லாரிகளை குறிவைத்து, சில யானைகள் சாலையில் உலா வருவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வழியாக கரும்பு ஏற்றி வந்த லாரியை பார்த்ததும் காட்டில் இருந்து ஒரு யானை சாலையை நோக்கி ஓடி வந்தது. லாரியை மறித்து அது நின்றதால், ஓட்டுநர் லாரியை மெதுவாக நிறுத்தினார். சதுர்த்தி வாழ்த்து யானையை கண்டு அச்சப்படாமல், சமயோசிதமாகவும் பாசத்துடனும் செயல்பட்ட அந்த லாரி ஓட்டுநர், "நாளைக்கு உனக்கு பிறந்தநாளு. ஒரு கத்தை கரும்பு எடுத்துக்கோ" என்று பாசத்துடன் கத்தினார். விநாயகரின் மறு உருவமாக கருதப்படும் யானைக்கு, அவர் முன்கூட்டியே தனது சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்தார். கரும்புகளை எடுத்த யானை ஓட்டுநரின் குரலை கேட்டு அமைதியான அந்த யானை, லாரியை எவ்வித சேதமும் செய்யாமல், அதில் இருந்த ஒரு கத்தை கரும்புகளை மட்டும் தனது தும்பிக்கையால் லாவகமாக எடுத்துக்கொண்டது. பின்னர், லாரிக்கு வழிவிட்டு அமைதியாக சாலையோரம் நகர்ந்து சென்று கரும்புகளை ருசிக்க தொடங்கியது. வரவேற்பு யானையிடம் மனித நேயத்துடனும் பாசத்துடனும் பேசிய ஓட்டுநரின் இந்த நெகிழ்ச்சியான செயல், அங்கிருந்த சக வாகன ஓட்டிகளால் வீடியோ எடுக்கப்பட்டது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/lone-elephant-stops-sugarcane-lorry-near-erode




