சென்னை, பாலியல் வழக்கில் வீரமணியின் லீலைகளை அம்பலப்படுத்திய என்னையே குற்றவாளி ஆக்குவதா என்று போலீசாரிடம் சாந்தி அழுது புலம்பினார். போலீஸ் காவல் 'ஜெம்' கிரானைட் தொழில் அதிபர் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை மூலம் சீரழித்த குற்றத்துக்காக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய காம களியாட்டத்துக்கு துணை போனதாக சாந்தி என்ற பெண்ணும், அவரது கணவருமான மகேந்திர சிம்கன் என்பவரும் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் சாந்தி, மகேந்திர சிம்கன் ஆகியோரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை போக்சோ சிறப்பு கோர்ட்டு அனுமதி அளித்தது. அதன்படி, இவர்களிடம் துணை போலீஸ் கமிஷனர் கீதாஞ்சலி, உதவி கமிஷனர் ராஜலட்சுமி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அழுது புலம்பிய சாந்தி ஏற்கனவே வீரமணியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் சாந்தி, மகேந்திர சிம்கன் ஆகியோரிடம் 200-க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பி அவர்களது வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்தனர். வீரமணியால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் எத்தனை பேர்?, எவ்வளவு நாட்களாக இந்த குற்றம் நடந்தது? வேறு யார் யாருக்கு எல்லாம் இந்த குற்றச் சம்பவத்தில் தொடர்பு உள்ளது? என கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். சிறுமிகளிடம் பாலியலில் ஈடுபட்ட வீடியோவை காண்பித்து வீரமணியை மிரட்டி பணம் பறிக்க பின்னணியில் இருந்தவர்கள் யார்? யார்? அவ்வாறு வீரமணியிடம் இருந்து எவ்வளவு பணம் பறிக்கப்பட்டது?, இந்த மிரட்டலில் அரசியல் கட்சி பிரமுகர்கள் ஈடுபட்டார்களா? என்றும் அவர்களிடம் போலீசார் கேள்வி எழுப்பினர். இந்த விசாரணையின்போது சாந்தி மிகுந்த சோகத்துடன் இருந்துள்ளார். பல நேரங்களில் தன் மீது எந்த தவறும் இல்லை என்றும், வீரமணியின் லீலைகளை அம்பலப்படுத்திய தன்னையே குற்றவாளி கூண்டில் நிறுத்தி விட்டீர்களே? என போலீசாரை பார்த்து அழுது புலம்பி உள்ளார். ஆவணங்களை கைப்பற்றிய போலீசார் வீரமணிக்கு உடன்பிறந்த சகோதரர்கள் 4 பேர் இருந்தபோதும் அவர்களுடன் வீரமணிக்கு பேச்சுவார்த்தை இல்லை என கூறப்படுகிறது. இதுதவிர, அவரது உறவினர்கள் நிறைய பேர் அவருக்கு எதிரிகளாக உள்ளதாகவும் தெரிகிறது. இந்த அடிப்படையில் வீரமணியின் எதிரிகள் யார், யார்? எதிரிகள் தூண்டுதலின் பேரில் இந்த விவகாரம் வெளிக்கொண்டு வரப்பட்டதா? என்றும் சாந்தியிடம் போலீசார் கேள்வி எழுப்பி உள்ளனர். போலீசாரின் பல கேள்விகளுக்கு பதில் அளித்த சாந்தி, சில கேள்விகளுக்கு மவுனமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. சாந்தியின் கணவர் மகேந்திர சிம்கனிடம் போலீசார் பல கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பி வாக்குமூலமாக பதிவு செய்தனர். தேனாம்பேட்டையில் உள்ள சாந்தியின் வீட்டுக்கு அவரை அழைத்து சென்ற போலீசார் பாலியல் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/am-i-being-made-the-accused-for-exposing-veeramanis-misdeeds-shanthi-lamented-tearfully




