வாஷிங்டன், பிபா உலகக் கோப்பை வரலாற்றின் மிகச்சிறந்த கம்பேக் ஆட்டங்களில் ஒன்றை அர்ஜென்டினா அணி பதிவு செய்துள்ளது.நேற்று இரவு அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடைபெற்ற 'சுற்று 16' (Round of 16) நாக்-அவுட் போட்டியில், ஆரம்பம் முதலே எகிப்து அதிரடி காட்டியது. 15-வது நிமிடத்தில் யாசர் இப்ராஹிம் முதல் கோலை அடித்து எகிப்தை முன்னிலை பெற செய்தார். தொடர்ந்து 67-வது நிமிடத்தில் முஸ்தபா ஜிகோ மேலும் ஒரு கோல் அடிக்க, அர்ஜெண்டினா 0-2 என்ற பின்னடைவை சந்தித்தது. இருப்பினும் இறுதிக்கட்டத்தில் அர்ஜெண்டினா அபாரமாக விளையாடியது. 79-வது நிமிடத்தில் மெஸ்சியின் உதவியுடன் கிறிஸ்டியன் ரொமேரோ கோல் அடித்து கணக்கை தொடங்கினார். அதன் பின்னர் 84-வது நிமிடத்தில் மெஸ்ஸியே ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 2-2 என சமன் செய்தார். கூடுதல் நேரத்தின் 90+2-வது நிமிடத்தில் என்சோ பெர்னாண்டஸ் வெற்றிக்கான கோலை அடிக்க, அர்ஜெண்டினா 3-2 என்ற கோல் கணக்கில் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அர்ஜென்டினா காலிறுதிக்கு முன்னேறியது. இறுதி விசில் ஒலித்தவுடன், அர்ஜென்டினா வீரர்கள் வெற்றியை கொண்டாட மைதானத்திற்குள் ஓடிவந்தனர். அப்போது கேப்டன் மெஸ்சி தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் ஆனந்த கண்ணீர் விட்டார். இது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்தது. மெஸ்ஸி கண்கலங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக மெஸ்ஸி கூறியதாவது, நான் தவறவிட்ட பெனால்டியாலும், அதை நான் எதிர்கொண்ட விதத்தாலும் என் உணர்வுகளை இழந்துவிட்டதாக உணர்ந்து அழுதேன். ஆனால் நல்லவேளையாக, மீண்டும் ஒருமுறை, இறுதியில் கடவுள் எனக்காக ஒரு சிறப்பானதை (வெற்றி ) வைத்திருந்தார். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/football/why-did-he-tear-up-on-the-field-argentina-captain-messi-answers




