சென்னை, தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கிய நிலையில் இன்று நிறைவடைந்துள்ளது. 5 முனைப் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் த.வெ.க., தி.மு.க. அ.தி.மு.க., நாம் தமிழர், கம்யூனிஸ்டு கட்சிகள் என 5 முனைப் போட்டி நிலவுகிறது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அந்தந்த கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) அலுவலகங்களில் கடந்த 9-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 12, 13, 14-ந் தேதி தொடர் விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் வேட்புமனு தாக்கல் நடந்தது. இதில் மதுராந்தகம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 14 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மனு தாக்கல் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மரகதம் குமரவேல், த.வெ.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்துடன் சென்று தனது மனுவை தாக்கல் செய்தார். தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன், முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தர் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகளுடன் வந்து மனு தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் மனு தாக்கல் செய்தார். மேலும், பனைமரம் ஏறும் தொழிலாளி சதீஷ்குமார் என்பவர் தனது தொழிலைக் குறிக்கும் வகையில் பனைமரம் ஏறும் உபகரணங்களுடன் வந்து சுயேச்சையாக மனு தாக்கல் செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. வேட்புமனு தாக்கல் நிறைவு தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கிய நிலையில் இன்று நிறைவடைந்துள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை மறுநாள் கடைசி நாள் ஆகும். வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 6 ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை 9 ஆம் தேதியும் நடைபெறும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/dharapuram-and-maduranthakam-by-elections-nomination-filing-concludes




