அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் காங்கிரஸ் தேர்தல் வரவுள்ளது. காங்கிரஸ் என்பது அமெரிக்காவின் நாடாளுமன்றம். இந்தத் தேர்தலை ‘மிட்-டேர்ம் தேர்தல்’ என்று கூறுவார்கள். பெரும்பான்மை வேண்டும் இதுவரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்த சட்டங்கள் எளிதாக நிறைவேறி வந்தன. அதற்குக் காரணம், அமெரிக்க காங்கிரஸில் ட்ரம்பின் குடியரசுக் கட்சிதான் பெரும்பான்மையாக இருந்தது. மீண்டும் ட்ரம்ப் இதே பிடியைத் தன் கையில் வைத்திருக்க வேண்டுமானால், வருகிற நவம்பர் தேர்தலை குடியரசுக் கட்சி வெற்றி பெற்றாக வேண்டும். ட்ரம்ப்‘அதுவே பழகிடும்’ ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடலைப் பழகிக்கொண்ட உலக நாடுகள்; இப்போது எப்படி சமாளிக்கின்றன? ஈரான் போர் ஆனால், அதற்குத் தடையாக ‘ஈரான் போர்’ வந்து நிற்கிறது. பிப்ரவரி கடைசித் தேதியில் தொடங்கிய ஈரான் போர் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்தப் போரால் உலக அளவில் எண்ணெய் சந்தை பாதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அமெரிக்காவும் விதிவிலக்கல்ல. அமெரிக்காவில் பெட்ரோல் விலை அதிகரித்திருக்கிறது. மேலும், இந்தப் போரால் அமெரிக்காவின் கையிருப்பு ஆயுதங்கள் குறைகிறது. அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு நெருக்கடி ஏற்படுகிறது என்று வேறு அமெரிக்க மக்களுக்கு அதிருப்தி இருந்து வருகிறது. ட்ரம்ப் என்ன சொன்னார்? இந்த அதிருப்தியைத் தாண்டி, இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சிப் பெரும்பான்மை பெற்றுவிட வேண்டும் என்று ட்ரம்ப் கணக்குப் போடுகிறார். இதற்காக நேற்று அமெரிக்க மக்களுக்குத் தூண்டில் ஒன்றை விரித்துள்ளார் ட்ரம்ப். நேற்று (செப்டம்பர் 9) நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ட்ரம்ப், “வருகிற தேர்தலில் மேல்சபை, கீழ்சபை என இரண்டிலும் குடியரசுக் கட்சியினர் வெற்றி பெற்றால், நம்முடைய அபரிவிதமான பொருளாதார வெற்றியால், அனைத்து (adult) அமெரிக்க குடிமக்களுக்கு 5,000 டாலர் டிவிடெண்டாக வழங்குவேன்” என்று கூறியிருக்கிறார். ட்ரம்பின் இந்த அறிவிப்பு டிவிடெண்ட் இல்லை. இது லஞ்சம் என்று சமூக லலைத்தளங்களில் சில அமெரிக்கர்கள் விமர்சித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/trump-promises-5000-dividend-if-republicans-win-midterms




