நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் தேசியத் தேர்வு முகமை (NTA) தொடர்பான குளறுபடிகளைக் கண்டித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கையாக இருந்தது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாணவர்களின் போராட்டத்திற்கும், கடுமையான எதிர்ப்பிற்கும் பிறகு இன்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "3 மே 2026 அன்று நடைபெற்ற நீட்-யுஜி தேர்வில் முறைகேடுகள் கண்டறியப்பட்டன. இந்திய அரசு உடனடியாக இதனைத் தன் கவனத்தில் கொண்டு, விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைத்தது. மேலும், தேர்வை ரத்து செய்து மறுதேர்வுக்கான தேதியையும் அறிவித்தது. இத்துடன், அடுத்த ஆண்டு முதல் இத்தேர்வை கணினி அடிப்படையிலான தேர்வு முறையில் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில், 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் தேர்வு தடையின்றி சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதே நமது முதன்மை முன்னுரிமையாக இருந்தது. இதற்காக முழு அரசாங்க அணுகுமுறையின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் இந்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகள், குறிப்பாக மாவட்ட நிர்வாகங்கள் மிக முக்கியப் பங்காற்றின. மேலும், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தாய்மார்களின் ஒத்துழைப்போடு 21 ஜூன் 2026 அன்று இத்தேர்வு முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டது. முதல் நாளிலிருந்தே, இதற்கு நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்வதிலிருந்து ஒருபோதும் பின்வாங்கியதில்லை. தேர்வு மாஃபியாக்களால் எந்தவொரு திறமையான மாணவனின் எதிர்காலமும் பாழாகக் கூடாது, எந்தவொரு மாணவருக்கும் அநீதி இழைக்கப்படக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். ஜூலை 16 அன்று வெளியான நீட்-யுஜி தேர்வு முடிவுகள் திருப்திகரமாக அமைந்தன; அதில் ஏழைப் பின்னணியில் இருந்து வந்த பல திறமையான மாணவர்களும் வெற்றி பெற்றனர். ஆனால், இந்த காலகட்டத்திலும் பல மாணவர்களைத் தவறாக வழிநடத்தப் பொறுப்பான பதவிகளில் இருக்கும் நபர்கள் தடைகளை உருவாக்க முயன்றது என் மனதை மிகவும் வேதனைப்படுத்தியது. நான் எப்போதும் நமது ஜனநாயகத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன்; மேலும் இளைஞர்களின் கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை ஆழமாக மதித்து வருகிறேன். அவர்கள் இந்தியாவின் எதிர்காலம் மட்டுமல்ல, ஒரு புதிய மற்றும் வளர்ந்த இந்தியாவின் தூண்கள், உருவாக்குநர்கள் மற்றும் எதிர்கால சிற்பிகள். கடந்த 10 நாட்களாக நடந்த நிகழ்வுகளைப் பார்த்து என் மனம் மிகவும் வருந்துகிறது. இது எனது தனிப்பட்ட சுயகௌரவம் சார்ந்த விஷயம் அல்ல. — Dharmendra Pradhan (@dpradhanbjp) July 25, 2026 இந்தியாவின் இளைஞர் சக்தியே இந்த நாட்டின் உண்மையான பலமாகும். தேசத்தின் இளைஞர் சக்தியைப் பொய்களின் சுழலில் சிக்க விடமாட்டோம் என்பதே எனது உறுதிமொழியாகும். ஜந்தர் மந்தரிலும் நாட்டிலும் நிலவும் இந்தச் சூழ்நிலையைத் தேசிய விரோத சக்திகள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது, தேசத்தின் ஒற்றுமை நிலைநிறுத்தப்பட வேண்டும், இந்தியாவின் ஒரு மாணவரின் எதிர்காலம் கூடச் சட்டச் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளக் கூடாது, நமது குழந்தைகள் தங்கள் நேரத்தைப் படிப்பிலும் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதிலும் செலுத்த வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, எனது ராஜினாமா கடிதத்தை மரியாதைக்குரிய பிரதமர் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன்." எனக் குறிப்பிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/governance/dharmendra-pradhan-education-minister-resignation-demand-neet-row




