சென்னை, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ‘டிசி’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் கலாநிதி மாறன் படத்தின் அருண் மாதேஸ்வரன், லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ஆகியோருக்கு புதிய பிஎம்டபிள்யூ கார்களைப் பரிசளித்துள்ளார். வரவேற்பை பெற்ற டிசி படம் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘டிசி’. வித்தியாசமான கதைக்களம் மற்றும் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுடன் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வித்தியாசமான கதைக்களத்தில் லோகேஷ் இப்படத்தின் மூலம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முழுநேர கதாநாயகனாக புதிய பரிமாணத்தில் அறிமுகமானார். ‘தாஸ்’ என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்த நிலையில், வாமிகா கபி ‘சந்திரா’ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தின் ஆக்ஷன் காட்சிகளும், லோகேஷ் கனகராஜின் நடிப்பும் ரசிகர்களிடையே கவனம் பெற்றன. சாரத் சந்திர சட்டோபாத்யாயாவின் பிரபலமான ‘தேவதாஸ்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு, பழிவாங்கும் கதைக்களத்துடன் இப்படத்தை அருண் மாதேஸ்வரன் உருவாக்கியிருந்தார். சொகுசு கார் பரிசு இந்த நிலையில், ‘டிசி’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து படக்குழுவினருக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் சிறப்பு பரிசை வழங்கியுள்ளார். இயக்குநர் அருண் மாதேஸ்வரன், நடிகர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு பிஎம்டபிள்யூ எக்ஸ்7 ரக சொகுசு கார்களை அவர் பரிசாக வழங்கியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. Mr. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/kalanithi-maran-gifts-a-bmw-car-to-the-prince-dc-film-crew




