டெல்லி, ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வர மறுப்பு தெரிவித்துள்ளது. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆண்கள் ஆக்கி தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. வரும் 27ம் தேதி முதல் நவம்பர் 5ம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய அணிகள் பங்கேற்க உள்ளனர். இத்தொடரில் உள்ள போட்டிகள் அனைத்தும் பஞ்சாப் மாநிலம் மொஹாலி மற்றும் ஜலந்தரில் நடைபெற உள்ளன. இத்தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் வரும் 1ம் தேதி மோத இருந்தன. ஜலந்தரில் உள்ள மைதானத்தில் இப்போட்டி நடைபெற இருந்தது. இந்தியாவுக்கு வர பாகிஸ்தான் அணி மறுப்பு இந்நிலையில், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடரில் பங்கேற்க இந்தியாவுக்கு வர பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவுக்கு வர முடியாது எனவும் பாகிஸ்தான் ஆடும் ஆட்டங்களை இந்தியாவுக்கு வெளியே வேறு நாட்டில் பொதுவான மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்யுமாறு ஆசிய ஆக்கி கூட்டமைப்பிடம் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/hockey/asian-champions-hockey-pakistan-refuses-to-come-to-india




