பா.ஜ.க முன்னாள் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வழங்கும்போது மின்வெட்டு ஏற்பட்டு மருத்துவமனை அதிகாரிகள் மொபைல் டார்ச் லைட் அடித்து மோதிரங்களை வழங்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் எந்த அளவிற்கு மின்வெட்டு நிலைமை மோசமாகி இருக்கிறது என்பதற்கு இந்த ஒரு சம்பவமே சாட்சி. மக்கள் நலத்திட்டத்தின் ஒரு துவக்கவிழாவானது அதுவும் உயிர் காக்கும் அரசு மருத்துவமனையில் இருளில் நடந்திருப்பது, த.வெ.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 4 மாதங்களிலேயே தமிழகத்தை இருண்ட மாநிலமாக மாற்றி விட்டது என்பதற்கான அடையாளமே. இருட்டில் நடந்த நிகழ்ச்சி ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய மின்சாரத்துறை அமைச்சரோ சமாளிக்கும் விதமாக அற்ப காரணங்களைக் கூறி வருவது ஏற்றுக் கொள்ள முடியாதது. அண்மையில் விகடன் இதழில் வெளியான தகவலின் படி, தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக தூத்துக்குடி, வடசென்னை, மேட்டூர் போன்ற அரசுக்குச் சொந்தமான அனல்மின்நிலையங்களில் மின் உற்பத்தியைக் குறைக்கச் சொல்லியும், தனியாரை ஊக்குவிப்பதற்காக இதுபோன்ற மின்வெட்டு செயற்கையாக ஏற்படுத்தப்படுகிறது என்ற தகவலும் வெளியாகி இருப்பது த.வெ.க அரசு மக்களுக்கான அரசா அல்லது தனியாருக்கான அரசா என்ற கேள்வியையும் எழுப்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரமணி வழக்கை மறைக்கும்படி, திமுக அரசு செயல்பட்டுள்ளது என்னும் தவெக-குற்றச்சாட்டு?: மக்கள் கருத்து? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/vanathi-srinivasan-alleges-that-tvk-government-has-turned-tamil-nadu-into-dark-state




