வாஷிங்டன், எச்-1பி விசா அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் விசாக்களில் பெரும் கெடுபிடிகளை காட்டி வருகிறது. இதில் அடுத்த அதிரடியாக எச்-1பி மற்றும் எல்-1 விசாக்களை நீட்டிப்பதற்கு அதிக கட்டணம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி 50 அல்லது அதற்கு மேல் தொழிலாளர்களை கொண்ட நிறுவனங்களில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டோர் எச்-1பி அல்லது எல்-1 விசாக்களை கொண்டவர்களாக இருந்தால் அவர்களின் விசா நீட்டிப்புக்கு கட்டணம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. எச்-1பி விசாவுக்கு 4,000 டாலராகவும் (சுமார் ரூ.3.80 லட்சம்), எல்-1 விசாவுக்கு 4,500 டாலராகவும் (சுமார் ரூ.4.28 லட்சம்) நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு முன்பெல்லாம் இந்த கட்டணம் எச்-1பி மற்றும் எல்-1 விசாவுக்காக தொடக்கத்தில் மனு செய்யும்போதோ அல்லது விண்ணப்பதாரர் புதிய பணிக்கு மாறும்போதோ செலுத்த வேண்டும். ஆனால் தற்போது விசா காலத்தை நீட்டிப்பதற்கே இந்த கட்டணம் அறிமுகம் செய்யப்படுகிறது. இதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செலுத்த வேண்டும். ஒரே ஊழியருக்காக வழக்கமான நீட்டிப்பு மனுக்களை தாக்கல் செய்யும் நிறுவனங்கள் இனி கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் இவ்வளவு பெரிய தொகை செலுத்தி வெளிநாட்டினரை தக்க வைக்க அமெரிக்க நிறுவனங்கள் முன்வருமா? என்பது சந்தேகம் என்பதால் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/us-announces-steep-hike-in-h-1b-visa-extension-fee-to-rs-380-lakh




