6 ஏவுகணைகள் வீச்சு ஏமன் நாட்டில், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சிப் படையினர் உள்ளனர். அவர்கள் கடந்த சில நாட்களாக சவுதி அரேபியாவை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக, செங்கடல் கப்பல் வழித்தட மான பாப் எல் மான்டெப் நீரிணையை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறார்கள். உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியாவை ஹவுதி இயக்கத்தினர் முற்றுகையிட்டு இருப்பது உலக மார்க்கெட்டுகளை கவலையடைய வைத்துள்ளது.இந்நிலையில், செங்கடலில் உள்ள சவுதி அரேபிய துறைமுகமான யன் புவை குறிவைத்து 6 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் வீசப்பட்டன. தாய்ப் நகரை நோக்கியும் ஏவுகணைகள் வீசப்பட்டன. இடைமறிப்பு இருப்பினும், அந்த ஏவுகணைகளை இடைமறித்து அழித்து விட்டதாக சவுதி அரேபிய ராணுவ செய்தித்தொடர்பாளர் துர்கி அல் மால்கி தெரிவித்தார். ஹவுதி இயக்கத்தினர்தான் இத்தாக்குதலை நடத்தியதாக அவர் கூறினார். ஆனால், இந்த தாக்குதலுக்கு ஹவுதி இயக்கம் உடனடியாக பொறுப்பேற்க வில்லை. ஐ.நா.வில் உலகத்தலைவர்களின் வருடாந்திர கூட்டத்தில் ஏமன் தரப்பில் பேசத்தயாராகி வரும் நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/houthi-rebels-attack-saudi-arabian-port-with-a-missile




