சென்னை, தவெக ஆட்சியில், கழிவுநீர் கால்வாயாக மாறுகிறதா கொசஸ்தலை ஆறு என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- எண்ணூர் கழிமுகத்திற்கு அருகேயுள்ள கொசஸ்தலை ஆற்றில் ரசாயனக் கழிவுகள் கலந்ததால், டன் கணக்கான மீன்கள் செத்து மிதப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிப்பதோடு, மிகுந்த வருத்தமுமளிக்கின்றன. சுமார் 8 மீனவக் கிராமங்களின் வாழ்வாதாரத்தை பெருமளவில் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் இந்நிகழ்வை, முதல்-அமைச்சர் விஜய் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். வலியுறுத்தல் வழக்கம் போல எம்எல்ஏக்களையும், அமைச்சர்களையும் வைத்து பாதிக்கப்பட்டவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினையை மூடி மறைப்பதை விட்டுவிட்டு, இறந்த மீன்களை ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி, இந்தப் பேரழிவுக்கான உண்மையான காரணம் என்ன என்பதை தவெக அரசு மக்கள் முன் அறிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டும். அதுமட்டுமன்றி செத்து மிதக்கும் டன் கணக்கான மீன்களால், நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால், உடனடியாக இறந்த மீன்களை அப்புறப்படுத்துவதோடு, பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு தகுந்த இழப்பீடும் வழங்க வேண்டுமென முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன். தவெக ஆட்சியில், கழிவுநீர் கால்வாயாக மாறுகிறதா கொசஸ்தலை ஆறு? எண்ணூர் கழிமுகத்திற்கு அருகேயுள்ள கொசஸ்தலை ஆற்றில் ரசாயனக் கழிவுகள் கலந்ததால், டன் கணக்கான மீன்கள் செத்து மிதப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிப்பதோடு, மிகுந்த வருத்தமுமளிக்கின்றன. சுமார் 8 மீனவக்… — Nainar Nagenthran (@NainarBJP) August 17, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/under-the-tvk-regime-is-the-kosasthalai-river-turning-into-a-sewage-canal-nainar-nagendran




