சென்னை, தேங்காய்த் தண்ணீரிலிருந்து மருத்துவக்கட்டு கண்டறிந்த பொள்ளாச்சி இளம் சாதனையாளர் விவேகானந்த்-க்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- வாழ்த்து வேளாண் உற்பத்தியில் வீணாகும் கழிவுப் பொருட்களைக் கொண்டு, சர்க்கரை நோயாளிகளின் ஆறாத புண்களை ஆற்றும் அதிநவீன உயிர்-மருத்துவக்கட்டு பொருளை (Bio-cellulose Wound Dressing - CocoHeal) வெற்றிகரமாகக் கண்டறிந்து, சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ள பொள்ளாச்சியைச் சேர்ந்த ‘ஆர்டர் பயோமெட்’ நிறுவனத்தின் தலைவர் விவேகானந்த் மற்றும் அவரது ஆய்வுக் குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். சர்க்கரை நோய் பொள்ளாச்சியில் கொப்பரை உற்பத்தியின் போது வீணாகும் தேங்காய்த் தண்ணீரை நொதிக்க செய்து, தேங்காய் எண்ணெயின் லாரிக் அமிலத்தை இணைத்து ‘கோகோஹீல்’ (CocoHeal) என்ற நவீன மருந்துக் கட்டை உருவாக்கியுள்ளார். சர்க்கரை நோய் பாதிப்பால் ஏற்படும் கொடிய புண்கள், தீக்காயங்கள் மற்றும் அறுவை சிகிச்சைக் காயங்களை விரைவாகக் குணப்படுத்தும் இந்தத் தயாரிப்பு, காப்புரிமை பெற்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவமனைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவது தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் மாபெரும் சாதனையாகும். மத்திய அரசின் மானிய உதவியோடு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சி, "கழிவிலிருந்து மதிப்புமிக்க செல்வம்" மற்றும் பிரதமரின் 'தற்சார்பு பாரதம்', 'மேக் இன் இந்தியா' ஆகியவற்றின் உண்மையான உன்னத நோக்கத்தை மெய்ப்பித்துக் காட்டியுள்ளது. உலக மருத்துவ அரங்கில் முத்திரை பதித்துள்ள விவேகானந்த் போன்ற இளம் கண்டுபிடிப்பாளர்கள் நம் தேசத்தின் பெருமிதம். மனித குலத்தின் துயர் துடைக்கும் இத்தகைய பயனுள்ள ஆராய்ச்சிகள் மென்மேலும் தொடரவும், அவரது நிறுவனம் உலகளாவிய உச்சங்களை எட்டவும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/medical-treatment-from-coconut-waste-nainar-nagendran-congratulates-pollachi-youth




