தூத்துக்குடி, அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த சக மாணவர்கள் 9 பேரை போலீசார் கைது செய்தனர். மாணவனுக்கு மிரட்டல் தூத்துக்குடி அருகே உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவனை, சக மாணவர்கள் தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். இதனை வெளியில் சொன்னால் மேலும் துன்புறத்துவோம் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவர் யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் அந்த மாணவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனை அறிந்த அந்த பள்ளிக்கூட ஆசிரியர், பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோரை அழைத்து தெரிவித்தார். போலீசார் விசாரணை தொடர்ந்து மாணவனை துன்புறுத்திய மாணவர்களின் பெற்றோர்களையும் வரவழைத்து கவுன்சிலிங் கொடுத்து உள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர், விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். 9 மாணவர்கள் கைது விசாரணையில், அந்த மாணவனை கடந்த ஆண்டு முதலே 9 மாணவர்கள் தொடர்ந்து துன்புறுத்தி தொந்தரவு கொடுத்து வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 மாணவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை தூத்துக்குடியில் உள்ள சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தி, நெல்லையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/student-subjected-to-atrocity-at-place-of-study-parents-shocked




