குருகிராம், டெல்லி அருகே பிரபல ரவுடியானதீபக் நந்தாலின் கூட்டாளிகள் 4 பேர் எண்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனார். அரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் புது டெல்லியின் தென்மேற்கே சுமார் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு முக்கிய தொழில் மற்றும் நிதி நகரமாகும். டெல்லி-என். சி.ஆர்.-ன் முக்கிய நகரங்களில் ஒன்றாக குருகிராம் உள்ளது. இங்குள்ள சுஷாந்த் லோக் இரண்டாம் கட்டிடப் பகுதியில் ஒரு பல்கலைக்கழகத்தின் நிறுவனர் வீடு உள்ளது. இவரது வீட்டுக்கு நேற்று இரவு பிரபல ரவுடி தீபக்நந்தால் என்பவரின் கூட்டாளிகள் 5 பேர் துப்பாக்கி மற்றும் ஆயு தங்களுடன் நுழைந்தனர். ரூ. 1 கோடி பேரம் திடீரென்று அவர்கள் பல்கலைக்கழக நிறுவனரின் மகன் விஷால் பெர்ரி என்பவரை துப்பாக்கி முனையில் பணயக்கைதியாக பிடித்தனர். மேலும் அந்த கும்பல் ரூ.1 கோடி பணம் பேரம் பேசினர். துப்பாக்கி முனையில் மிரட்டிய கும்பல் பணத்தை கொடுத்தால் விஷால் பெர்ரியை விட்டுவிடுவதாக கூறினர். இந்த தகவல் குருகிராம் போலீசாருக்கு தெரிய வந்தது. உடனடியாக போலீசார் அங்கு விரைந்தனர். வீட்டிற்குள் நுழைந்ததும் ரவுடிகளிடம் போலீசார் ஆயுதங்களை போட்டுவிட்டு சரண் அடையுமாறு கூறினர். உடனே ரவுடிக்கும்பல் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டது.பதிலுக்கு போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கி சூடு சுமார் 60 ரவுண்டு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த கடுமையான மோதலில் 5 ரவுடிகளும் பலத்த காயம் அடைந்தனர். 3 போலீசாருக்கும் காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த ரவுடிகள் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் 4 பேர் இறந்ததாக தெரிவித்தனர். தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து சிதறி கிடந்த துப்பாக்கிகள், குண்டுகளை சேகரித்தனர். நேற்று இரவு நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. துப்பாக்கி சுடும் சத்தத்தால் அப்பகுதி மக்கள் பதற்றம் அடைந்தனர். வெளிநாட்டில் வசிக்கும் ரவுடி தொடர்ந்து இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வெளி நாட்டில் வசிக்கும் ரவுடி தீபக் நந்தால் அரியானா மற்றும் டெல்லியை சேர்ந்த ஒரு சர்வதேச ரவுடி கும்பலின் தலைவன் ஆவார். இவர் வெளி நாடுகளில் இருந்தபடி சமூக வலைத்தளங்கள் தனது குற்றசெயல்களை மூலம் இயக்கி வருகிறார். இந்தியாவில் தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் வேலையிலும் ஈடுபட்டு வந்தார். மோதல், என்கவுண்டர் சம்பவத்தை தொடர்ந்து சுஷாந்த்லோக்கில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் உயிரிழந்த ரவுடிகளின் அடையாளங்கள், மற்றும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் குறித்த விரிவான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சதித்திட்டத்தில் வேறு யார் ஈடுபட்டிருந்தனர்? குற்றவாளிகள் ஆயுதங்களை எங்கிருந்து பெற்றனர்? தீபக் நந்தால் கும்பல் யார் யாரிடம் தொடர்பில் இருந்தனர் என்பது பற்றி தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/4-gangsters-killed-3-cops-injured-60-rounds-of-firing-in-gurugram-encounter




