வாஷிங்டன், 23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழா 'கிளைமாக்சை' நெருங்கி விட்டது. இதில் இந்திய நேரப்படி அட்லாண்டாவில் இன்று (புதன்கிழமை) நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா, இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. 1978, 1986, 2022-ம் ஆண்டு சாம்பியனான அர்ஜென்டினா அணி லீக் சுற்றில் அல்ஜீரியா (3-0), ஆஸ்திரியா (2-0), ஜோர்டான் (3-1) அணிகளை எளிதில் வீழ்த்தி தனது பிரிவில் முதலிடம் பிடித்தது. ஆனால் அதன் பிறகு அந்த அணியின் பயணம் சற்று தடுமாற்றம் நிறைந்ததாகவே இருந்தது. 2-வது சுற்றில் கேப்வெர்டேவை கூடுதல் நேரத்தில் போராடி (3-2) வென்றது. 3-வது சுற்றில் எகிப்து அணிக்கு எதிராக 79 நிமிடங்கள் வரை 2 கோல் பின்தங்கி இருந்து கடைசி 11 நிமிடங்களில் அடுத்தடுத்து 3 கோல் போட்டு தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டெழுந்து வெற்றியை (3-2) வசப்படுத்தியது. காலிறுதியில் கூடுதல் நேரத்தில் 2 கோல் அடித்து (3-1) சுவிட்சர்லாந்தை வீழ்த்தி 6-வது முறையாக அரையிறுதியை எட்டியது. அர்ஜென்டினா அணியில் எதிர்பார்த்தபடியே கேப்டன் லயோனல் மெஸ்சி கதாநாயகனாக ஜொலிக்கிறார். நடப்பு தொடரில் முதல் 5 ஆட்டங்களில் 8 கோல்கள் அடித்து அசத்தினார். கடந்த உலகக் கோப்பையையும் சேர்த்து தொடர்ச்சியாக 9 ஆட்டங்களில் கோல் போட்ட அவர் கால்இறுதி ஆட்டத்தில் கோல் அடிக்க தவறியதால் அவருடைய கோல் பயணத்துக்கு முட்டுக்கட்டை விழுந்தது. என்றாலும் அவரது கால்கள் களத்தில் மீண்டும் நளினமாடி அந்த அணியை 7-வது முறையாக இறுதிப்போட்டிக்கு அழைத்து செல்லுமா? என்பதே ரசிகர்களின் ஆவலாகும். லட்டாரோ மார்ட்டினஸ் (2 கோல்), ஜூலியன் அல்வாரெஸ், என்ஜோ பெர்னாண் டஸ், மாக் அலிஸ்டர், லிசாண்ட்ரோ மார்ட்டினஸ் ஆகியோரும் அந்த அணிக்கு பலம் சேர்க் கின்றனர். 1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து லீக் சுற்றில் குரோஷியாவையும் (4-2), பனாமா வையும் (2-0) பந்தாடியது. 2-வது ஆட்டத்தில் கானாவுடன் (0-0) டிரா கண்டது. 2-வது சுற்றில் காங்கோவையும் (2-1), 3-வது சுற்றில் மெக்சிகோவையும் (3-2) சாய்த்தது. கால்இறுதியில் கூடுதல் நேரத்தில் நார்வேயை (2-1) வெளியேற்றி 4-வது முறையாக அரையிறுதியை எட்டியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/football/who-will-advance-to-the-world-cup-final-argentina-and-england-clash-today




