பிஷ்கேக், பிரதமர் மோடி கிர்கிஸ்தானில் இருந்து இந்தியா புறப்பட்டார். உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன்படி பயணத்தின் முதல் நாடாக உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்சியோயெவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஷாங்காய் உச்சி மாநாடு இதனை தொடந்து உஸ்பெகிஸ்தான் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அங்கிருந்து கிர்கிஸ்தான் புறப்பட்டு சென்றார். கிர்கிஸ்தான் சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் சதிர் நர்கோஜோ உலு ஜபரோவ் வரவேற்றார். கிர்கிஸ்தானில் இன்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் உள்பட பல நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். இந்தியா புறப்பட்ட பிரதமர் மோடி இந்நிலையில், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி இன்று இந்தியா புறப்பட்டார். கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் இருந்து தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்ட பிரதமர் மோடி இன்று மாலை டெல்லி வந்தடைகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/kyrgyzstan-trip-ends-pm-modi-departs-for-india




