அன்டிகுவா, கரீபியன் பிரீமியர் லீக் 14வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் ஆகிய 7 அணிகள் இடம்பெற்றுள்ளன. அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ் - கயானா அமேசான் வாரியர்ஸ் இந்நிலையில், கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 15வது லீக் ஆட்டத்தில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ் - கயானா அமேசான் வாரியர்ஸ் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற கயானா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அன்டிகுவா 116 ரன்களுக்கு ஆல் அவுட் இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த அன்டிகுவா வீரர்கள் கயானா பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் அன்டிகுவா 17 ஓவர்கள் முடிவில் 116 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆனது. சற்று நிலைத்து நின்று ஆடிய அந்த அணியின் தொடக்க வீரர் ஜென்கோ அதிகபட்சமாக 37 ரன்கள் சேர்த்தார். அதேவேளை, சிறப்பாக பந்து வீசிய ஷெமார் ஜோசப் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கயானா வெற்றி இதையடுத்து 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கயானா 9.5 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் அன்டிகுவாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கயானா அபார வெற்றிபெற்றது. அதிரடியாக ஆடிய ஹெட்மயர் 49 ரன்களும், ஹோப் 47 ரன்களும் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/caribbean-premier-league-guyana-crush-antigua




