மகாராஷ்டிர மாநிலத்தில் புகழ்பெற்று விளங்கும் தலம் பண்டரிபுரம். அங்கே பெருமாள் பாண்டுரங்கனாகக் கோயில்கொண்டுள்ளார். விட்டல்லன் என்று போற்றப்படும் அந்தப் பெருமாள் நாடெங்கிலும் அதே திருநாமத்தோடு எழுந்தருளியிருக்கிறார். அப்படி ஒரு தலம்தான் காஞ்சிபுரம் அருகே உள்ள விட்டலபுரம். சென்னை-புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலையில், மாமல்லபுரம் தாண்டி வெங்கம்பாக்கத்திலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் இளையனார்குப்பம் என்ற ஊர் வரும். அங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது விட்டலபுரம் பிரேமிக விட்டலர் திருக்கோயில். விட்டலபுரம் பிரேமிக விட்டலன் ஆலயம் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் சார்பில் இந்தப் பகுதியை ஆட்சி செய்த கொண்டையதேவ மகாராஜா விட்டலனின் பரமபக்தர். இவருக்கு அருள்செய்த விட்டலன், இவரின் விருப்பப்படி மாமல்லபுரத்தை அடுத்த துளசிவனத்தில், பண்டரிபுரத்தில் உள்ளவாறே எழுந்தருளினார். அங்கேயே ஶ்ரீவிட்டலனுக்கு ஆலயம் எழுப்பி அந்த ஊரையும் `விட்டலபுரம்' என்று மாற்றினார் கொண்டைய தேவமகாராஜா. இவர் காலத்துக்குப் பிறகு சதாசிவராயர் காலத்தில் (1558-ம் ஆண்டு) இந்தக் கோயில் விஸ்தரிக்கப்பட்டு, திருத்தேர் ஒன்றும் செய்யப்பட்ட வரலாற்றை இங்குள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. பழைமையைப் பறைசாற்றும் அழகான கற்றளி இந்தக் கோயில். கோபுரம் தாண்டி உள்ளே சென்றால், கொடிமரம் பலிபீடமும் திகழ. கோயிலின் பரந்த அமைப்பும் அமைதியும் நம்மைப் பரவசப்படுத்துகின்றன. விருதுநகர் மாவட்டம் சதுரகிரி: சித்தர்கள் மண்ணில் சிலிர்ப்பூட்டும் வனகாளி, பிலாவடிகருப்பர் சந்நிதிகள் முன்மண்டபத்துடன் கூடிய கருவறை. அங்கே ருக்மிணி, சத்யபாமா சமேதராகஶ்ரீபிரேமிக விட்டலன் அருள்கிறார். சுமார் 5 அடி உயரத்தில், இடுப்பில் கை வைத்து நின்ற கோலத்தில் நமக்காகக் காத்து நிற்கிறார். பிரேமிக விட்டலன் கேட்கும் வரம் அளிக்கும் தயாபரன் என்கிறார்கள். மங்கிய விளக்கொளியில் இந்த ஆனந்தக் கண்ணனைத் தரிசிக்கும்போதே, நம்முள் கவலைகள் மறந்து களிப்பும் நம்பிக்கையும் பிறக்கின்றன. இந்தச் சந்நிதியில் நின்று ஹரி நாம ஜபம் செய்தால் நம் கவலைகள் அனைத்தும் மறந்துபோகுமாம். இங்கு நாமசங்கீர்தன முறைப்படியே அர்ச்சனை என்பதால், மந்திரங்களுக்குப் பதிலாக ‘ஹரே ராம ஹரே ராம, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண.’ எனும் நாமமே ஒலிக்கிறது. இங்கு தினமும் மாலையில் கிருஷ்ண நாம சங்கீர்த்த பஜனையும் நடக்கிறது. விட்டலபுரம் பிரேமிக விட்டலன் ஆலயம் குழந்தை வரம் திருமண வரம் அருளும் அருளும் கண்ணனாக இந்தப் பிரேமிக விட்டலன் விளங்குகிறார். இங்கு வந்து வேண்டிக்கொண்டு நோய்நொடிகள் தீர்ந்தவர்கள் அநேகம்பேர் என்கிறார்கள். மூலவருக்கு முன்பு உற்சவர் திருமேனி. இரு தேவியருடன் காட்சி தருகிறார் உற்சவர். கூடவே ஶ்ரீசந்தான லட்சுமி தாயார், சக்கரத் தாழ்வார் ஆகியோரின் உற்சவத் திருமேனிகளும் உள்ளன. அரியலூர் மாவட்டம் வாரணவாசி கல்யாண சுந்தர விநாயகர்: வாழைப்பழ மாலை தரும் உத்தியோக யோகம்! கருவறைக்கு எதிரே 5 படிகளுடன்கூடிய தனிச் சந்நிதியில் ஶ்ரீகருடாழ்வார் கண்ணனைக் கும்பிட்ட நிலையில் காட்சி தருகிறார். கோயில் திருச்சுற்றில் ஶ்ரீசந்தான லட்சுமி தாயார், ஶ்ரீநிவாசப் பெருமாள், ஶ்ரீவரதராஜப் பெருமாள், ஶ்ரீவிக்ஷ்வக்சேனர், ஶ்ரீராமாநுஜர் சந்நிதிகள் அழகிய கற்றளிகளாக உள்ளன. அழகிய விமானத்தோடு காணப்படும் இந்தக் கோயிலின் சுற்றில் நந்தவனமும் இரு உடைபட்ட சிலைகளும், கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இங்கு வந்து திரட்டுப்பால் வைத்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை. குழந்தை வரம் வேண்டுவோர், இந்தக் கோயிலுக்கு வந்து சந்தான மகாலட்சுமியையும், சந்தான கிருஷ்ணரையும் வழிபட, விரைவில் புத்திரப் பாக்கியம் கிட்டும்; பால் பாயசம் படைத்து வழிபட்டால் கல்வியில் மேன்மை உண்டாகும் என்கிறார்கள் பக்தர்கள். விட்டலபுரம் பிரேமிக விட்டலன் ஆலயம் காலை 7 முதல் 10.30 மணி வரையும்; மாலை 5 முதல் 6.30 மணி வரையும் பிரேமிக விட்டலன் ஆலயம் திறந்திருக்கும். ஏகாதசி நாளில் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும். இங்கு கண்ணன் சிவ-விஷ்ணு அம்சத்துடன் அருள்வதாக ஐதிகம். ஆகவே, சிவராத்திரியும் இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் கோகுலாஷ்டமி, வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட வைபவங்களும் இந்த ஆலயத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. பெரிதும் கூட்டமின்றி அமைதியும் பெரும் சாந்நித்தியமும் கொண்டு விளங்கும் இந்தத் தென்னக பண்டரிபுரம், தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் உள்ள இந்த ஆலயம். எனவே மிக சுத்தமாகவும் தெய்விகத் தன்மையுடனும் பரமாரிக்கப்பட்டு வருகிறது. மாமல்லபுரம் செல்பவர்கள் கட்டாயம் தரிசிக்கவேண்டிய அற்புத ஆலயம் இது. திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் கோயில்: கலையழகும் புராண சிறப்பும் வாய்ந்த திருத்தலம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/spiritual/temples/kanchipuram-vittalapuram-sri-premika-vittal-temple




