சென்னை, பத்திரம் பதிந்தவுடன் தானியங்கி பட்டா மாறுதல் முறையில் உள்ள குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட உள்ளது என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ‘மக்களுக்காக அரசு’ என்பதை குறிக்கோளாகக் கொண்டுள்ள தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் ஒவ்வொரு துறையிலும் மக்கள் நலம் சார்ந்த பல்வேறு திட்டங்களை எளிமைப்படுத்தவும், அதன் பயன்கள் மக்களை விரைந்து சென்றடையவும் அறிவுரை வழங்கி வருகிறார்கள், பத்திரப் பதிவு வருவாய்த் துறையைப் பொறுத்தவரையில், நில உரிமையாளரின் சொத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக கருதப்படும் பட்டாவினை விரைந்து வழங்கும் வகையில், உட்பிரிவு இல்லாத சொத்து பத்திரப் பதிவு அலுவலகத்தில் முடிவுற்றதும், விற்பனை செய்பவரின் பெயர், புல எண் மற்றும் பரப்பளவு ஆகியவை இணையதள பட்டாவில் உள்ள பெயர் மற்றும் இதர விவரங்களோடு ஒன்றாக இருந்து, வில்லங்கங்கள் ஏதும் அந்தச் சொத்தின்மீது இல்லாதிருப்பின் அதனை வாங்குபவரின் பெயருக்கு தானியங்கி முறையில் இணையதள வழியில் பட்டா மாறுதல் (Auto-mutation) செய்து தரப்படுகிறது. தற்போது அமுல்படுத்தப்பட்டு வரும் இந்த நடைமுறையில் சில இடர்ப்பாடுகள் உள்ளதை அறிந்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் இவற்றை உடனடியாக களைந்து, உட்பிரிவு இல்லாத சொத்தை வாங்கியவரின் பெயருக்கு தானியங்கி பட்டா மாறுதல் சேவை அளிக்க முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்கள், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுரையின் பேரில், இது குறித்து 12.06.2026 அன்று எனது தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது, இந்தக் கூட்டத்தில், அரசாணை (நிலை) எண்.84, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் (நி.அ-2) துறை, நாள் 04.02.2020 குறித்து விவாதிக்கப்பட்டு, சில திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. மேற்படி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கு ஏற்ப, முந்தைய இணையவழி உட்பிரிவு அல்லாத தானியங்கி பட்டா மாறுதலில் உள்ள இடர்பாடுகள் கண்டறியப்பட்டு, அதனை சரி செய்து திருத்திய அரசாணை (நிலை) எண். 526, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை நாள் 25.06.2026 இவ்வரசால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தானியங்கி பட்டா மாறுதல் மென்பொருளில் கீழ்க்காணும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன:- 15 நாட்களுக்குள் நடைமுறை இந்த அரசால் வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி, தானியங்கி பட்டா மாறுதல் மென்பொருளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 15 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம், சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் உட்பிரிவு அல்லாத இனங்களில் தானியங்கி முறையில் (Auto-mutation) பெருவாரியான பட்டாக்கள் மாறுதல் செய்யப்படும். இதனால் பொதுமக்கள் நிலத்தினை பதிவு செய்த பிறகு பட்டா மாறுதல் தொடர்பாக சார்பதிவாளர் அலுவலகத்திற்கோ, வட்டாட்சியர் அலுவலகத்திற்கோ நேரில் செல்லும் நிலை தவிர்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/deficiencies-in-automatic-patta-transfer-system-to-be-addressed-once-the-deed-is-registered-minister-sengottaiyan-informs




