மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகளான சாந்தி நாராயண சாமி இன்று அதிகாலை சென்னையில் காலமானார். மறைந்த சிவாஜி கணேசன் - கமலாம்பாள் தம்பதிக்கு சாந்தி, தேன்மொழி, என இரு மகள்கள் மற்றும் நடிகர்கள் ராம்குமார், பிரபு என இரு மகன்கள். இவர்களில் சாந்திதான் மூத்தவர். முதல் பெண் குழந்தை என்பதால் சிவாஜிக்கு இவர் மீது எப்பவுமே கொஞ்சம் கூடுதல் பிரியம் உண்டு என்பார்கள். சென்னை அண்ணா சாலையில் சிவாஜி திறந்த தியேட்டருக்கு அதனாலேயே சாந்தி திரையரங்கம் என அவரது பெயரை வைத்தார். அதேபோல் தங்கள் வீட்டின் முதல் விசேஷம் என்பதால் சாந்தி – நாராயணசாமி ஜோடியின் திருமணத்தையும் மிக பிரமாண்டமாக நடத்தினார் சிவாஜி. காமராஜர், பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி,.ஆர், பாலிவுட் ஹீரோக்கள், பாடகி லதா மங்கேஷ்கர் என பலரும் கலந்து கொண்டனர் அந்த திருமணத்தில். அண்ணாசாலையே போக்குவரத்தால் ஸ்தம்பித்த திருமணம் என்றால் மிகையில்லை. சிவாஜி குடும்பம் சிவாஜியின் மறைவுக்குப் பிறகு சகோதரிகள் இருவருக்கும் சகோதரர்கள் இருவருடனும் கருத்து வேறுபாடு எனச் செய்திகள் அடிபட்டு வந்த நிலையில் தற்சமயம் சிவாஜி ஆரம்பகாலத்தில் வாழ்ந்த பூர்வீக வீட்டில் வசித்து வந்தனர் சாந்தி தேன்மொழி குடும்பத்தினர். கடந்த சில தினங்களாக உடல்நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு வந்த சாந்தி இன்று காலமாகி இருக்கிறார், சாந்தி மறைவுக்கு திரையுல பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://cinema.vikatan.com/kollywood/actor-sivaji-ganesans-elder-daughter-santhi-passed-away




