‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இளையராஜாவின் அண்ணனான தயாரிப்பாளர் ஆர்.டி.பாஸ்கரின் மகன் ஜெயன் அறிமுகமாகும் புதிய திரைப்படத்திற்கு ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு கதை எழுத யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார் புதிய ஹீரோ அறிமுகம். இசைஞானி இளையராஜாவின் அண்ணன் மகனான ஜெயன் தற்போது தமிழ் சினிமாவில் புதிய கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் அறிமுகமாகும் இந்த புதிய திரைப்படத்திற்கு ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’என்று சுவாரஸ்யமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு - யுவன் சங்கர் ராஜா கூட்டணி. இளையராஜாவின் குடும்ப வாரிசைத் திரையுலகிற்கு அறிமுகம் செய்யும் இந்த பிரம்மாண்டமான பொறுப்பை அவரது குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொரு வெற்றி கூட்டணியான வெங்கட் பிரபுவும், யுவனும் இணைந்துள்ளனர். இப்படத்திற்கு முன்னணி இயக்குனர் வெங்கட் பிரபு கதை எழுத, 'இசை யுவன்' யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இயக்குனர் மற்றும் தயாரிப்பு விவரம். இப்படத்தின் கதைப் பகுதியை முன்னணி இயக்குனர் வெங்கட் பிரபு எழுதியுள்ள நிலையில், படத்திற்கான திரைக்கதை மற்றும் இயக்கத்தை சுஜித் என் சுப்ரமணியம் மேற்கொள்கிறார். இப்படத்தை எலிபேண்டைன் நிறுவனத்தின் சார்பில் ரமணன் பாலகங்காதரன் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். ஜெயனுடன் சோனா ஒலிக்கல் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் வாகை சந்திரசேகர், குரு சோமசுந்தரம், ரோஜு, பிபியன், ஆர்யா லட்சுமி, பிரகதீஸ்வரன் பூபாலம், இந்துமதி, ரேஷ்மி, ராஜிந்த், ராம்குமார், மீனா, திலகவதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைப் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய வாரிசு நடிப்பில் களம் இறங்குவதால், இந்த ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இப்போதே தொடங்கியுள்ளது. இசைத்துறையில் பொன்விழா கண்ட இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் மற்றும் அவரது பாடல்களை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இயக்குநர் சுதா கொங்கரா கிரியேட்டிவ் புரொட்யூசராக இணைந்திருப்பது படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு சமீபத்தில் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்தது. திரைப்படத்தின் டீசர் வெளியீடு இந்நிலையில், ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. The playlist begins. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/rajas-playlist-film-teaser-out




