சென்னை, போதைப் பொருள் இல்லா தமிழகம்‘ என்று மேடையில் உறுதிமொழி எடுத்துக்கொள்வது மட்டும் தீர்வாகாது என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார். இது தொடர்பாக, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதில் தெரிவித்திருப்பதாவது;- கல்லூரி மாணவர் உயிரிழப்பு போதை இல்லா தமிழகம்’ என்ற முழக்கம் மட்டும் போதாது தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் ‘போதைப் பொருட்கள் இல்லா தமிழகம்’ என்ற இயக்கத்தை தொடங்கி வைத்த அடுத்த சில மணிநேரங்களிலேயே, கோவையில் 19 வயது பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் என்பவர் போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையான 20 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் பயன்பாடு மாணவரின் மரணமானது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ள நிலையில், கல்லூரியில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை தொடர்பாக அவர் தகவல் அளித்ததன் காரணமாகவே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளதாக செய்திகள் தெரிப்பது இன்னும் வருத்தத்திற்குரியது. கொடிய முகம் தமிழக இளைஞர்கள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து இதுபோன்று போதைப்பொருள் பிடியில் சிக்கி தங்களது எதிர்காலத்தையே பாழாக்கி கொண்டிருப்பது மட்டுமல்லாமல் சமூக விரோதிகளாகவும் மாறிவருவது போதைப்பொருள் பழக்கத்தின் கொடிய முகம். கடும் நடவடிக்கைகள் மட்டுமே தீர்வு ‘போதைப் பொருள் இல்லா தமிழகம்‘ என்று மேடையில் உறுதிமொழி எடுத்துக்கொள்வது மட்டும் தீர்வாகாது. தீவிர பிரச்சாரங்களும், போதைப் பொருள் தடுப்புத் துறையின் கடும் நடவடிக்கைகள் மட்டுமே இதற்குத் தீர்வு. பாதுகாப்பு உறுதி திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது என்றால், தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் விழித்துக்கொள்ள வேண்டும். மேலும் போதைப் பொருள்கள் பயன்பாடு, கடத்தல் குறித்து புகார் அளிப்பவர்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/drug-free-tamil-nadu-pledge-alone-not-the-solution-vanathi-srinivasan




