புதுக்கோட்டை, தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ், புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “சட்டமன்ற நிகழ்வுகள் அனைத்தும் தற்போது நேரலையில் வருகின்றன. சட்டமன்றத்தில் யார் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை மக்களே பார்த்து தெரிந்து கொள்ள முடியும். எதிர்க்கட்சிகள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து, மக்களுக்கான திட்டங்கள் குறித்து விரிவாக த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் விளக்கமளித்து வருகிறோம். சட்டமன்றத்தில் நாங்கள் எந்த பிரச்சினையும் செய்வதில்லை. யார் பிரச்சினை செய்வார்கள் என்பது உங்களுக்கே தெரியும். நான் அணிந்திருக்கும் கண்ணாடி குறித்து சர்ச்சையை எழுப்புகின்றனர். இந்த கண்ணாடியை மருத்துவர் அறிவுரையின் பேரில் நான் அணிந்திருக்கிறேன். இதை ஏ.ஐ. கண்ணாடி என்று சொல்வது நகைச்சுவையாக இருக்கிறது. எதையாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/we-do-not-create-any-trouble-in-the-legislative-assembly-minister-parvez




