தேவனஹள்ளி, பாங்காக்கில் இருந்து பெங்களூருவுக்கு விமானங்களில் கடத்திய ரூ.27 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 5 பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சர்வதேச விமான நிலையம் பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு பாங்காக்கில் இருந்து அடிக்கடி உயர்ரக கஞ்சா கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பாங்காக்கில் இருந்து வரும் விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதன்படி, பாங்காக்கில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவது பற்றிய ரகசிய தகவல் சுங்கத்துறையினருக்கு கிடைத்தது. பறிமுதல் இதையடுத்து, பாங்காக்கில் இருந்து பெங்களூருவுக்கு வந்திறங்கிய விமானத்தில் வந்த பயணிகளிடமும், அவர்களது உடைமைகளிலும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது 2 பயணிகளின் உடைமைகளில் 36 கிலோ உயர்ரக கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.12 கோடியே 53 லட்சம் மதிப்பிலான 36 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல், பாங்காக்கில் இருந்து மற்றொரு விமானத்தில் வந்த ஒரு பயணியிடம் 15.3 கிலோவுக்கு உயர்ரக கஞ்சா சிக்கியது. அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.5.35 கோடியாகும். அந்த பயணியும் கைது செய்யப்பட்டார். இதுபோன்று, பாங்காக்கில் இருந்து பெங்களூருவுக்கு வந்திறங்கிய இன்னொரு விமானத்திலும் உயர்ரக கஞ்சா கடத்தி வந்த 2 பயணிகளை சுங்கத்துறையினர் கைது செய்தார்கள். வழக்குப்பதிவு அந்த பயணிகளிடம் இருந்து ரூ.9.38 கோடி மதிப்பிலான 26 கிலோ உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த கடத்தல் தொடர்பாக கைதான 5 பயணிகள் மீதும் விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/high-grade-cannabis-worth-27-crore-seized-at-bengaluru-airport-5-arrested




