உதயநிதி மீது 6 பிரிவுகளில் வழக்கு பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் இரட்டை அர்த்தத்தில் உதயநிதி பேசிய புகாரில் அவர் மீது 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக சார்பில் எதிர் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவும், மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்காததை கண்டித்தும் தஞ்சாவூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள், விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர். உதயநிதி ஸ்டாலின் இதில், காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவுபடி கர்நாடக அரசு தண்ணீர் தர வில்லை. ஆனால் இதைப்பற்றி ஒரு வார்த்தை கூட முதல்வர் பேசவில்லை. முதல்வருக்கு இருக்கிற ஒரே கவலையெல்லாம் எப்படி திமுக மீது பொய் வழக்கு போடுவதுதான். அப்போது மேடைக்கு கீழ் இருந்தவர்கள் நடிகை (திரிஷா) பெயரைச் சொல்லி கத்தினர். உடனே எங்கு தண்ணி வரணுமோ அங்கு வரணும் சிரித்தபடி நான் காவிரியைச் சொன்னேன் என்று இரட்டை அர்த்தத்தில் பேசினார். உதயநிதியின் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தது. உதயநிதி ஸ்டாலின் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் உதயநிதியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். சமூக ஊடகங்களிலும் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டனர். இந்நிலையில். மகளிரணியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து உதயநிதி மீது பெண்கள் வன்கொடுமை தகுப்புச் சட்டம் உட்பட 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தஞ்சாவூரை சேர்ந்த போலீஸ் டீம் உதயநிதியை கைது செய்வதற்காக சென்னையில் உள்ள அவரது வீட்டில் முகாமிட்டுள்ளனர். பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் மேகதாது - காவிரி பிரச்சினைக்காக தஞ்சையில் திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இரட்டை அர்த்தப்படும்படியான தரங்கெட்ட வார்த்தைகளை பேசியதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது போன்று பேசும் திமுகவினரின் நாகரீகமற்ற, பொறுப்பற்ற… — Vanathi Srinivasan (@VanathiBJP) August 4, 2026 தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் லயோலா மணி எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பும் மரபும் மிக்க மிகப்பெரிய பொறுப்பை உணராமல், வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. தன் தாத்தாவும் தந்தையும் வகித்தும்கூடவா முதல்வர் பதவியின் தகுதியும் தராதரமும் தெரியாமல் ஒருவர் இருக்க முடியும்? அவை அடக்கமும்… — N Anand (@BussyAnand) August 3, 2026 பாடகி சின்மயி அரசியலில் இருக்கும் ஆண்கள், தங்களின் அரசியல் கணக்குகளுக்குள் துளியும் சம்பந்தமில்லாத பெண்களை இழுக்காமல், உண்மையான மக்கள் பிரச்சினைகளில் மட்டும் கவனம் செலுத்தினால் அது எவ்வளவு சிறப்பாக இருக்கும்! திமுகவின் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்ற வசிவு பேசும் நபர்கள் அரசியல் மேடைகளில் அவ்வளவு அருவருப்பாகப் பேச முடிந்தது ஏன் என்றால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படும் வரை, ஒருமுறை அல்ல, பலமுறை அவ்வாறு பேச ஊக்குவிக்கப்பட்டார் என்பதனால்தான். தமிழக எதிர்க்கட்சித் தலைவர் (LoP) பேசியதன் உண்மையான உட்பொருள் என்னவென்றே எனக்குப் புரியவில்லை; சிறிது நேரத்திற்கு முன்பு எனக்குத் தெரிந்த ஒருவர் விளக்கிய பிறகே எனக்குப் புரிந்தது. ஏதோ குடிநீர் இணைப்பு பற்றிப் பேசுகிறார் என்றுதான் நான் நினைத்தேன். உண்மையில் பெரும்பாலான பெண்களுக்கு அது புரியவே இல்லை. அது ஆண்களுக்கே உரிய ('Bro thing') பாணியிலான பேச்சாக இருந்துள்ளது. குறைந்தபட்சம், அங்கே கூச்சலிட்டுக் கொண்டிருந்த ஆதரவாளர்களையாவது அமைதியாக இருக்கும்படியோ அல்லது நாகரிகமாக நடந்துகொள்ளும்படியோ அவர் சொல்லியிருக்கலாம், ஆனால் அவரோ அதைவிட மோசமான ஒரு கருத்துத் தாக்குதலை நடத்தினார். "நாங்கள்தான் தவறான அர்த்தம் கற்பிக்கிறோம், எங்கள் எண்ணம்தான் அசிங்கமானது" என்று இந்த அரசியல் வட்டாரத்தில் உள்ளவர்கள் மிக எளிதாகப் பழிபோட்டுவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால், இதே கூட்டத்தினர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மதிப்பிற்குரிய திருமதி ஜெயலலிதா அவர்களைப் பற்றி எப்படியெல்லாம் பேசினார்கள், குறிப்பிட்டார்கள் என்பதை நினைவில் வைத்திருக்கும் அளவுக்கு எனக்கு வயதாகியிருக்கிறது. பழைய தலைமுறையினரின் கெட்ட வார்த்தைப் பேச்சுகள் இயல்பாக்கப்பட்டுவிட்டன; கடந்த கால மூத்த அரசியல்வாதிகளின் பேச்சுத் தொகுப்புகள் இன்றைக்கும் ரீல்ஸ்களாக (Reels) சுற்றிக்கொண்டிருக்கின்றன. ஆனால், புதிய இளைய தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் அதைவிடச் சிறப்பாக நடந்து கொள்வார் என்றுதான் எதிர்பார்க்கப்படுமே தவிர, அதைவிட ஆபாசமாகவும் மோசமாகவும் மாறுவார் என்று அல்ல. எவ்வளவு பெரிய ஏமாற்றம்! பெண்கள் இதற்குப் போதிய அளவில் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்யவில்லை — மிகுந்த கோபத்துடனும், ஆதரவுக் குரலுடனும். If men in politics could just focus on actual issues instead of dragging women who have nothing to do with their scheme of things - it would be stellar. The reason abusive motor mouths like DMKs Shivaji Krishnamurthy could speak so vulgarly on political platforms is because he… — Chinmayi Sripaada (@Chinmayi) August 4, 2026 நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேச்சு அதிர்ச்சியளிக்கிறது. எல்லாக் காலத்திலும் ஆண்களின் அரசியலுக்கு பெண்களே எளிய இலக்குகளாக இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. பெண்களை எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்கிற மனநிலை,இரட்டை அர்த்தப் பேச்சுக்கள்… — Jothimani (@jothims) August 4, 2026 பாஜக நிர்வாகி குஷ்பு உதயநிதி ஸ்டாலினின் பேச்சைக் கேட்டேன். அது மிகவும் அருவருப்பான, மலிவான மற்றும் ஆழமான இழிவுபடுத்தும் பேச்சாக இருந்தது. அவர் எந்த அரசியல் கலாச்சாரத்தை வாரிசாகப் பெறத் துடிக்கிறாரோ, அதையே அது பிரதிபலிக்கிறது. இப்படிப்பட்ட மனநிலை கொண்டவர்கள் ஒரு அரசியல் கட்சியை வழிநடத்தவும், என்றாவது ஒருநாள் இந்த மாநிலத்தை ஆளவும் ஆசைப்பட்டால், கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும். பெண்களை ஏசுவது, இழிவுபடுத்துவது மற்றும் அவமானப்படுத்துவதை ஒருவகை அரசியல் நாடகமாக மாற்றி, தங்கள் விசுவாசிகளின் கைதட்டல்கள், விசில்கள் மற்றும் சிரிப்பொலிகளில் திளைக்கும் நபர்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? இதைப் பற்றி என்னை விட வேறு யாருக்குச் நன்றாகத் தெரியும்? இத்தகைய கீழ்த்தரமான மொழியை இயல்பாக்குபவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். பெண்களின் கண்ணியம் அரசியலுக்குப் பலியாக்கப்பட்டுவிட்டால், நாளை உங்கள் சொந்தக் குடும்பம் உட்பட எந்தக் குடும்பமும் இதேபோன்ற தாக்குதலிலிருந்து தப்பிக்க முடியாது. அரசியல் கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், பொது தளத்துப் பேச்சுக்கு என்று ஒரு எல்லை இருக்க வேண்டும். பெண்களை மதிக்க வேண்டும். உங்கள் இஷ்டத்திற்கும் ஆசைக்கும் ஆட்டுவிக்கும் காய்களாக அவர்களை நடத்தக் கூடாது. உங்கள் அரசியல் எதிரியின் திறமை, தொலைநோக்குப் பார்வை அல்லது தலைமைத்துவத்திற்கு உங்களால் ஈடுகொடுக்க முடியாதபோது, தனிப்பட்ட முறையில் அவதூறாகப் பேசுவதும் ஆபாசமாக நடந்துகொள்வதும் எளிதான தப்பித்தல் வழியாகிவிடுகிறது. உதயநிதிஸ்டாலின் மற்றும் அவரது தந்தை ஸ்டாலின் ஆகியோர் பல ஆண்டுகளாகப் பல சர்ச்சைகளை எதிர்கொண்டுள்ளனர், ஆனால் அதுவே பொது வாழ்க்கையின் தரநிலையாக மாறிவிடக் கூடாது. ஒரு பொது மேடையில் திருமதி த்ரிஷாவை இழிவுபடுத்தியதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் அவருக்கு நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தான் செய்த இந்த அசிங்கமான தவறை ஏற்றுக்கொண்டு, மன்னிப்பு கேட்கும் தைரியமும் நாகரிகமும் அவருக்கு இருக்கிறதா என்று பார்ப்போம்! Heard Stalin's speech. It was crass, cheap and deeply derogatory; reflecting the very political culture he seems eager to inherit. If those with such a mindset aspire to lead a political party and one day govern the state, then God help us. What else can one expect… — KhushbuSundar (@khushsundar) August 4, 2026 தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் புகார் கடிதம் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாடு விவசாயிகளின்- பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சனையான காவிரி நீர் பிரச்சனையில். நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சட்ட நடவடிக்கைகள் உட்பட பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வரும் நிலையில், நாங்களும் போராடுகிறோம் என ஷோ காட்டும் விதமாக ஆகஸ்ட் 3-ஆம் தேதி தஞ்சாவூரில் திமுக… — Arunraaj TVK (@arunraajkg) August 4, 2026 பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ாசநிதி பொது வாழ்வில் உள்ளவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. எனவே, அவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடனும் நாகரிகத்துடனும் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். பெண்கள் கல்வி, அறிவியல், நிர்வாகம், தொழில், விளையாட்டு உள்ளிட்ட… — Rajmohan (@imrajmohan) August 3, 2026 தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தின் அரசியல் பண்பாட்டிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில், உதயநிதி அவர்கள் பேசிய ஆபாசப் பேச்சுக்கு வன்மையான கண்டனம்! பொது மேடைகளில் பேசப்படும் வார்த்தைகள் அரசியல் நாகரிகத்தையும், சமூகப் பொறுப்பையும் பிரதிபலிக்க வேண்டும். ஆனால் அண்மையில் உதயநிதி அவர்கள்… — Virudhai Magal Keerthana (@Keerthana4VNR) August 3, 2026 நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பும் மரபும் மிக்க மிகப்பெரிய பொறுப்பை உணராமல், வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. தன் தாத்தாவும் தந்தையும் வகித்தும்கூடவா முதல்வர் பதவியின் தகுதியும் தராதரமும் தெரியாமல் ஒருவர் இருக்க முடியும்? அவை அடக்கமும்… — N Anand (@BussyAnand) August 3, 2026 அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் பேரறிஞர் பெருந்தகை அண்ணா ஆரம்பித்த இயக்கத்தில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்றும் கடுகளவு கூட இல்லாமல் ஆபாச பேச்சுக்களை மக்கள் மத்தியில் பேசி பெண்களை கீழ்த்தரமாக பார்க்கும் ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள்! உங்கள் ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்வது நல்லது,… — TVK Ramesh (@RameshOffcl) August 3, 2026 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று தஞ்சாவூரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்திய மொழி முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர் தனது கருத்தை திரும்பப் பெற்று, அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.@Udhaystalin — Manickam Tagore.Bமாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) August 3, 2026 'அலட்சியத்தோடும் - ஆணவத்தோடும் விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்துப் போராட்டம்' என நேற்று தஞ்சாவூரில் திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை திரிஷாவைக் குறிப்பது போல ஆபாசமாகப் பேசியிருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். அவரது ஆபாசப் பேச்சிற்கு எதிர்ப்புகளும், கண்டனங்களும் தொடர்ந்து எழுந்து வருகின்றன. அதன் தொகுப்பு இது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/udhayanidhis-speech-sparks-massive-outrage-across-tamil-nadu




