சென்னை, இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை மாலை 06 மணியளவில் வெளியாக உள்ளது. 16 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஜீவா, தற்போது இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஜீவாவின் 47-வது படமாக உருவாகி வருகிறது. இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், ஜீவாவின் திரைப்பயணத்திலும் முக்கியமான படமாக அமைந்தது. இந்த நிலையில், சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஜீவா - ராஜேஷ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இதனால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகும் படம் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படம் நகைச்சுவையை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். மேலும், பரிதாபங்கள் சுதாகர் உள்ளிட்ட பலரும் சிறப்பு தோற்றங்களில் நடித்துள்ளனர். தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடம் கவனம் பெற்றன. நாளை வெளியாகும் பர்ஸ்ட் சிங்கிள் இந்த நிலையில், ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ஜீவா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. Jiiva's - First Single on Friday at 6PM.⭐ முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/update-on-the-first-single-from-jeevas-film-jaliya-irundha-oruthan




