சென்னை, பயணிகளுக்கான தேவையை கருத்தில் கொண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் - சென்னை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட இருக்கிறது. சிறப்பு ரெயில் இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ஜோத்பூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு அக்டோபர் 3-ந் தேதி முதல் நவம்பர் 28-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் இரவு 9.20 மணிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 04815) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் 3-வது நாள் இரவு 8 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும். முன்பதிவு மறுமார்க்கத்தில், சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலில் இருந்து ஜோத்பூருக்கு அக்டோபர் 6-ந் தேதி முதல் டிசம்பர் 1-ந் தேதி வரை செவ்வாய்கிழமைகளில் மாலை 5.15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (04816) 3-வது நாள் இரவு 8.30 மணிக்கு ஜோத்பூரை சென்றடைகிறது. இரு மார்க்கத்திலும் 9 முறை வாராந்திர ரெயிலாக இயக்கப்படும் இந்த சிறப்பு ரெயில் 19 பெட்டிகளை கொண்டதாக இருக்கும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-jodhpur-chennai




