நீலகிரி, நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக வனவிலங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் தீவன பற்றாக்குறை, குறைந்த எல்லைக்குள் அதிக வனவிலங்குகள் உள்பட பல்வேறு காரணங்களால் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. குறிப்பாக ஊட்டி அடுத்த மஞ்சூர், " குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடி கள் மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல் இரவில் கடைகளை உடைத்து பொருள்களை சூறையாடி சாப்பிட்டு வருகின்றன. இந்தநிலையில் ஊட்டி சர்ச்ஹில் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் மாலை கரடி உலா வந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு கரடி வனப்பகுதிக்குள் சென்றது. கரடி நடமாட்டத்தால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-bear-wanders-into-residential-area-public-in-a-state-of-fear




