யாஷின் ‘டாக்ஸிக்’ படத்தின் ‘தபாஹி’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் யாஷ் தற்போது இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், கேங்ஸ்டர் டிராமா கதைக்களத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹுமா குரேஷி, தாரா சுட்டாரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘லேடீஸ் அண்ட் லேடீஸ்’ எனப் பெயரிட்ட நாயகிகளின் அறிமுக வீடியோ வெளியானது. இதில், நடிகைகள் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். கோவா மாபியாவை மையமாகக் கொண்ட கதை 1940 முதல் 1970-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், கோவாவில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாபியா கும்பல்களின் பின்னணியில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக ‘டாக்ஸிக்’ உருவாகியுள்ளது. முதலில் இந்தப் படம் கடந்த மார்ச் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரு சில காரணத்தால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கடும் விமர்சனங்களை சந்தித்த டீசர் சமீபத்தில் வெளியான ‘டாக்ஸிக்’ படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வைரலானது. அதே நேரத்தில், டீசரில் இடம்பெற்ற சில காட்சிகள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் எழுந்தன. குறிப்பாக, சிலர் ஆபாச காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கருத்து தெரிவித்ததால், டீசர் சர்ச்சைக்கும் உள்ளானது. ‘தபாஹி’ பாடல் வெளியானது இந்நிலையில், ‘டாக்ஸிக்’ படத்தின் ‘தபாஹி’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை தமிழில் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என 5 மொழிகளில் இப்படம் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளியாகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/yashs-toxic-film-tabahi-song-out




