சென்னை, தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பிற தென்மாநிலங்களில் கட்சியை வளர்க்க தவெக திட்டமிட்டு வருகிறது. அதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, பிரபல மலையாள நடிகர் தேவன். இவர் மலையாளத்தில் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் பாட்ஷா, வாத்தியார், ஆதி, சிவகாசி போன்ற படங்களிலும் நடித்து புகழ்பெற்றுள்ளார். பாஜகவில் இருந்து விலகல் இதனிடையே, இவர் கேரளா மக்கள் கட்சி என்ற கட்சியை கடந்த 2024ம் தொடங்கினார். இதனை தொடர்ந்து அவர் பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜக மாநில துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக பாஜகவில் இருந்த தேவன் கடந்த 17ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். மேலும், பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். கடினமான உழைத்தும் பாஜகவில் தனக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று கூறி அவர் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். தவெகவில் இணையும் நடிகர் தேவன் இந்நிலையில், பாஜகவில் இருந்து விலகிய நடிகர் தேவன் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தேவன் வரும் 10ம் தேதி சென்னைக்கு வந்து முதல்-அமைச்சர் விஜய்-ஐ சந்தித்து தவெகவில் இணைய உள்ளார். அவருக்கு கேரளாவில் தவெக மாநிலத்தலைவர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/popular-malayalam-actor-to-join-tvk-after-meeting-vijay



